tamilnadu

img

‘எப்போதும் உங்கள் பக்கம் நிற்போம்’

முத்துப்பேட்டையில்  ஐ.வி.நாகராஜன் பேச்சு

மன்னார்குடி, மார்ச் 9- மதச்சார்பின்மையை சுதந்தி ரத்தை அரசியல் சட்டத்தின் நெறி களை பாதுகாக்க இந்தியா முழு வதும்நடைபெறும் போராட்டங்களில் உங்களுக்கு பக்கபலமாக உங்களில் ஒருவராக நாங்கள் என்றும் நிற்போம் என்று மாநிலக்குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன் கூறினார். முத்துப்பேட்டை நகரில் நடைபெற்றுவரும் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான தொடர் இருப்பு போராட்டத்தில் கலந்துகொண்ட ஐ.வி.நாகராஜன் மேலும் பேசியதாவது: அம்பேத்கர் இரவு பகல் பாராது உழைத்து உருவாக்கிய இந்திய அரசியல் சட்டத்தை ஆளும் பிஜேபி அரசும் ஆர்.எஸ்.எஸ். கூட்டமும் கேள்விக்குறியாக்கி வருகின்றன. குடியுரிமை யில் மதத்தை புகுத்தும் இந்திய குடியுரிமை திருத்தச்சட்டம் அவ்வாறுதான் அமைந்துள்ளது. இத னை எதிர்த்து இன்று நாடு முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் பல்வேறு வடிவங்களிலான போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

வண்ணாரப்பேட்டையில் நடை பெற்ற சம்பவத்தில் காவல்துறை கடுமையான அடக்குமுறைகளையும் கட்டவிழ்த்துவிட்டது. ஆனால் அதற்குப் பிறகும் இன்னும் வீரியமாக தமிழ்நாடு முழுவதும் குடி யுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வரு கின்றன. அதன் தொடர்ச்சியில் தான், அதன் ஒரு பகுதியாக கூத்தா நல்லூர் அடியக்கமங்கலம் முத்துப் பேட்டையில் இன்று நீங்கள் இருபத்தி மூன்றாவது நாளாக தொடர்ந்து  போராடிக் கொண்டிருக்கிறீர்கள். வர லாறு காணாத போராட்டங்கள் இந்தியா முழுவதும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

தில்லி ஜவஹர்லால் நேரு பல் கலைக்கழகத்தில் காவிகள் கூட்டம் தொழில் முறை ரவுடிகளை ஏவி மாண வர்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தியது.  அதன் தொடர்ச்சியில் தில்லியில் ஆர்எஸ்எஸ் அரங் கேற்றிய  சமீபத்திய பயங்கரவாத வன்முறைகளில் 47 க்கு மேற்பட்டோர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.  ஏராளமானோர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த பாசிச அராஜகங்களுக்கு பின்னால் இருப்பது ஆர்.எஸ்.எஸ்.தான் என்பதை நாம் மட்டுமல்ல உலக நாடுகளும் அறிந்துள் ளன. சர்வதேச சமூகத்தில் இந்தியா வின் மதிப்பும் மாண்புகளும் அதன் ஜனநாயக பாரம்பரியத்தின்அருமை களும்  உண்மையான நாட்டுப்பற்றாளர் களாகிய நாம் வேதனைப்படும் வகையில் சிதைந்துள்ளன. இவ்வ ளவு போராட்டங்களுக்கும் சம்பவங் களுக்கு பிறகும் மோடியும் அமித் ஷாவும் ஒரு அங்குலம் கூட எங்கள் முடிவில் இருந்து பின்வாங்க போவதில்லை என்று பேசுகின்றனர். இது போராடுகின்ற இந்திய மக்களின் உணர்வுகளை கொச்சைப் படுத்தும் பாசிச போக்காகும்.  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் சென்னையில் குடியுரிமை மதத்தை புகுத்தும் இச்சட்டத்தை எதிர்த்து சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இந்தச் சட்டத்தை  கேரளத்தைப் போல  எதிர்த்து எடப்பாடி அரசு சட்டமன்றத் தில் தீர்மானம் இயற்ற வேண்டும். 

அவ்வாறு அதிமுக அரசு செய்யத்  தவறினால்  நகரங்கள் கிராமங்களில் இருக்கும் தனது கட்சி அணிகளை திரட்டி பிரம்மாண்டமான வீதி போராட்டங்களை மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி நடத்தும் என்ற அறி விப்பை வெளியிடும்.  குடியுரிமை திருத்தச்சட்டத்தின் அம்சங்களை முஸ்லீம் மக்களுக்கு எதிரானது என்று  மட்டும் நாங்கள் பார்க்கவில்லை. இது ஒட்டுமொத்த இந்திய மக்களுக்கு எதிரானது என்பதையும் அடிப்படை யில் இந்திய அரசியலமைப்பு விதிகளுக்கு முரணானது என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கின்றோம்.

மத நல்லிணக்கத்தை வலியுறுத்த மக்கள் ஒற்றுமையை பாதுகாக்க இந்திய சுதந்திரத்தையும் மதச்சார் பின்மையையும் பாதுகாக்க இந்தியா முழுமையிலும் நடைபெற்று வரும் இந்தப் போராட்டங்களில் நாங்கள் எப்போதும் உங்கள் அருகில் பக்க பலமாக  நிற்போம் என்பதை தெரி வித்துக் கொள்கிறேன். இவ்வாறு ஐ.வி.நாகராஜன் உரையாற்றினார்.  கூட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கே.தமிழ்மணி, கே.ஜி. ரகுராமன், அகில இந்திய வழக்கறி ஞர்கள் சங்க மாவட்டச் செயலா ளர் அரசு தாயுமானவன், இன்குலாப், ஒன்றியச் செயலாளர் கே.பால சுப்பிரமணியன், நகரச் செயலாளர் செல்லத்துரை, பி.வி.கனகசுந்தரம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் இஸ்லாமியர்கள் மற்றும் மதசார்பற்ற ஜனநாயக சக்திகளின் உறுப்பினர்கள் 1300 பேர் கலந்து கொண்டனர்.      (ந.நி.)

;