tamilnadu

img

தலித் குடியிருப்புக்கு குடிநீர் வழங்கிடுக

ஊத்தங்கரை, ஜூன் 24- மிட்டப்பள்ளி கிராம தலித் குடியிருப்புக்கு குடிநீர் கேட்டு  காலிக்குடங்களுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் அப்பகுதி மக்கள் ஊத்தங்கரை  வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர். கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத் தங்கரை வட்டம், மிட்டப்பள்ளி ஊராட்சிக்குட்பட்ட மிட்டப்பள்ளி கிராமத்தில் 300க்கும் மேற்பட்ட அருந்ததியர் குடும்பங்கள் உள் ளனர். இவர்கள் அனைவரும் நில மற்ற கூலித்தொழிலாளர்கள். இம் மக்களுக்கு ஊராட்சி நிர்வாகத்தின் மூலம் குடிநீர் வழங்கி வந்தனர். அது வும் போதுமானதாக இல்லை. தற்போது நிலவிவரும் வறட்சியில் அருந்தியர் குடியிருப்பு பகுதிக்கு  குடிநீர் வருவதில்லை. மேலும் ஒகே னக்கல் குடிநீரும் வருவதில்லை. இதனால் தொடர்ந்து அப்பகுதி மக்கள் சிரமமடைந்து வருகின் றனர். இந்நிலையில், அப்பகுதியி லிருந்து விவசாய கிணறுகளுக்கு சென்று குடிநீர் எடுத்து வந்த அப்பகுதி மக்கள் குடிநீர் கேட்டு ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை முறையிட்டனர். ஆனால் குடிநீர் கிடைக்க எந்த நடவடிக்கையும் இல்லை.மேலும் கூலிவேலை செய்து பிழைப்பு நடத்திவரும் இம் மக்களுக்கு நூறு நாள் வேலை  திட்டத்தில் வேலையும் வழங்குவ தில்லை.

எனவே, குடிநீர், நூறுநாள் வேலை வழங்க வேண்டும் என  வலியுறுத்தி திங்களன்று மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமை யில் மிட்டப்பள்ளி அருந்ததிய மக்கள் ஊத்தங்கரை வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு காலிக் குடங்களுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சிபிஎம் கிளை செயலாளர் சேட்டு தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் வி. கோவிந்தசாமி, பகுதி செயலாளர் கே.எம்.எத்திராஜ், வட்டக்குழு உறுப்பினர் ஆர்.விஜியகுப்பன், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட குழு உறுப்பினர் வி. வேலு மற்றும் நிர்வாகிகள் வெங்க டாஜலம், தங்கபாலு, திருமாள், முனியப்பன், மீனா, செந்தாமரை, வசந்தா, மலர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இதனையடுத்து தலைவர்க ளுடன் பேச்சுவார்த்தை நடத்திய துணை வட்டார வளர்ச்சி அலு வலர் கோதண்டன், காவல்துறை அதிகாரிகள், போர்க்கால அடிப் படையில் லாரி மூலம் குடிநீர் விநியோகிக்கவும், நிரந்தரமாக  குடிநீர் கிடைக்க வழிவகை செய்ய வும், நூறுநாள் வேலைத்திட்டத்தில் வேலை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித் தனர்.

;