உலகம் முழுவதும் கொரோனா தோற்றால் இதுவரை 10,77,218 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியா தினசரி உயிரிழப்புகளின் எண்ணிக்கை தொடர்ந்து முதலிடத்தில் இருக்கிறது. மேலும், தற்போது உலகம் முழுவதும் இறக்கும் ஐந்து நபர்களில் ஒருவர் இந்தியராக உள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 921 பேர் உயிரிழந்துள்ளனர். உலகம் முழுவதும் 5 ஆயிரத்து இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.
உலகம் முழுவதும் கொரோனா தோற்றால் 3,74,50,148 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 10,77,218 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில், 2,80,97,823 பேர் குணமடைந்துள்ளனர். 82,75,107 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
அமெரிக்காவில் மட்டுமே பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 80 லட்சத்தை நெருங்கி வருகிறது. தற்போது, அமெரிக்காவில் மொத்த பாதிப்பு 7,944,944 ஆக முதலிடத்தில் உள்ளது. இந்தியாவில் 7,051,543 ஆக உயர்ந்துள்ளது. பிரேசிலில் 5,091,840 ஆக உள்ளது. ரஷ்யாவில் 1,285,084 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் சனிக்கிழமையன்று அதிகபட்சமாக 74,535 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் 50315 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பிரேசிலில் 34,650 பேருக்கு கொரோனா பாதிப்பும், ரஷ்யாவில் 12,846 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.