tamilnadu

img

உத்தரப்பிரதேசத்திற்கு மோடியின் நற்சான்று பொருந்துமா?

லக்னோ:
கொரோனா பாதிப்பு எண்ணிக்கையில் ஜுன் மாதத்தில் உத்தர பிரதேசம் புதிய உச்சத்தை அடைந்துள்ளது. ஆனால், பிரதமர் நரேந்திர மோடி உத்திரப்பிரதேசத்தின் ‘வெற்றிக்’ கதைகளை ‘டாம் டாம்’ போட்டுக் கொண்டிருக்கிறார்.

ஜீன் 26 அன்று மோடி, உத்தரப் பிரதேசம் கோவிட் 19 தொற்றை கட்டுப்படுத்த முன்முயற்சிகளை மேற்கொண்டதன் மூலம் 85000 மக்களை மரணத்திலிருந்து காப்பாற்றிவிட்டது என்றார். “இங்கிலாந்து, பிரான்ஸ், இத்தாலி, ஸ்பெயின் ஆகிய நான்கு நாடுகளிலும் கொரோனாவால் 1.30 லட்சம் பேர் இறந்துள்ளனர்; ஆனால், இந்த நான்கு ஐரோப்பிய நாடுகளின் மொத்த மக்கள் தொகையான 24 கோடி மக்களைக் கொண்ட உ.பி.யில் கொரோனா தொற்றால் வெறும் 600 பேர் மட்டுமே இறந்துள்ளனர்;
கொரோனாவால் ஏற்படப்போகும் பாதிப்பைமுன்கூட்டியே உ.பி.அரசு உணர்ந்து, தனிமைப்படுத்துதல், கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டதால் தான் தொற்று நோய்க்கு பலியானோர் எண்ணிக்கை குறைந்துவிட்டது என்று மோடி பேசினார். பாஜக அரசு  அல்லாமல்  இப்போது எதிர்க்கட்சிகள் ஆட்சியில் இருந்திருந்தால்,  சமாளிக்க முடியாமல் ஏதாவது சாக்குப்போக்குகளைச் சொல்லி நிலைமையை மோசமாக்கி இருப்பார்கள் என்று அரசியலும் செய்தார். உடனே, உ.பி.மாநில அரசின் செய்தித் தொடர்புத்துறையும், பாஜக மற்றும் சங் பரிவாரங்களும் மோடியின் பேச்சை  பரபரப்பாக விளம்பரப்படுத்தின.இருப்பினும், மோடியின் தவறான வாதத்திற்கு உ.பி.மக்களிடம் வரவேற்பில்லை. ஏனெனில்,கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு யோகி ஆதித்யநாத்தின் அரசு உரிய நிவாரணங்களை வழங்கவில்லை.மாறாக தனதுதவறுகளையும், நிர்வாகத் திறமையின்மை யையும் மறைக்கவே யோகியின் அரசு முயற்சி செய்தது.

57 சிறுமிகள்
கான்பூரில் அரசால் நடத்தப்படும் சிறுமிகள் காப்பகத்தில் 57 சிறுமிகளுக்கு கோவிட் 19 தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதைவிட அதிர்ச்சி, ஐந்து சிறுமிகள் கருவுற்று இருந்தனர். பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டவர்களில் ஒரு சிறுமி எய்ட்ஸ் நோயாலும், இன்னொரு சிறுமி மஞ்சள் காமாலையாலும் பாதிக்கப்பட்டு இருந்தது அதை விடக் கொடுமையானது.காப்பக ஊழியர் ஒருவரும் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு இருந்தார். இவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டனர். இன்னும் உள்ள 114 சிறுமிகள்,37 ஊழியர்கள் தனிமைப்படுத்தல் முகாமில் உள்ளனர். காப்பகத்தில் உள்ள சிறுமிகள் ஐந்து மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள்.இச்சம்பவம் மாநிலம் முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. ஆனாலும், பிரதமர் மோடி இதுபற்றி எல்லாம் கண்டுகொள்ளவே இல்லை. அவர் ஜுன் 26 அன்று பாஜக உ.பி.அரசுக்கு பாராட்டு பத்திரம் வாசிக்கும் முன்பாகவே கான்பூர் சிறுமிகள் அரசுக்காப்பக அவலம் நடந்துவிட்டது என்றாலும், மன உறுத்தல் ஏதுமின்றி உ.பி. அரசுக்கு நற்சான்று வழங்கினார்.மீடியாக்களில் வந்த செய்திகளின் அடிப்படையில், தேசிய மனித உரிமைகள்  ஆணையம் உ.பி. தலைமைச் செயலாளரிடமும், காவல்துறை இயக்குநரிடமும் கான்பூர் சம்பவம் குறித்து விளக்கம் கோரியது. சுயேச்சையான விசாரணை நடத்துமாறு மாநில அரசைக் கேட்டுக் கொண்டது. இதற்குப் பின்னர் உ.பி. அரசு மேற்கொண்ட  நடவடிக்கைகள் கற்பனை செய்ய முடியாதவையாகும். சில அச்சு ஊடகங்கள், செய்திச் சேனல்கள், சமூக மீடியாக்கள் மீது சகட்டுமேனிக்கு அடக்குமுறை நட வடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.காப்பகம் பற்றி சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பியதாக பெயர்களே இல்லாமல் ஏராளமானோர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. 

கதைகளுக்கு பணியவில்லை கொரோனாஇதுபோன்றே,  கோவிட் 19 பாதிப்பு தொடர்பான தகவலை மறைத்தல்- நிர்வாகக் குளறுபடி, சாதிரீதியிலான பாகுபாடு போன்றவைகளை மறைக்க அரசு அடக்குமுறை நடவடிக்கைகளை மேற்கொண்டதாலும்,  ஜுன் மாதத்தில் கொரோனா பாதிப்பு கடுமையாக அதிகரித்துள்ளது. பிரதமர் மோடி, உ.பி.வெற்றிக் கதைகளை கதைத்துக் கொண்டிருக்கும் போதே அங்கு வைரஸ் தொற்றால் பலியானோர் எண்ணிக்கை தொடர்ச்சியாக அதிகரித்துக் கொண்டே இருந்தது.இந்தியாவில் மொத்தமுள்ள கொரோனா  ஹாட்ஸ்பாட் 15 மாவட்டங்களில் உ.பி.யில் மட்டும் நான்கு மாவட்டங்கள் உள்ளன. மாநிலத் தலைநகர் லக்னோவில் நிலைமை மோசம் என்பதிலிருந்து படுமோசமான நிலைமைக்கு சென்று கொண்டிருக்கிறது. அங்கு மட்டுமே நூறு கட்டுப்பாட்டு மண்டலங்கள் உள்ளன. காவல்துறையினர் கடுமையாக தொற்றுக்கு ஆளாகின்றனர். பொதுமக்கள் இருக்கட்டும்! காவல்துறையினரே நம்பிக்கை இழந்த நிலையில்தான் உள்ளனர்.

பிரண்ட்லைன், ஜீலை 7, 2020 ஏட்டில் வெங்கிடேஷ் ராமகிருஷ்ணன் எழுதிய செய்திக்கட்டுரையில் இருந்து...
====தொகுப்பு : ம.கதிரேசன்====

;