tamilnadu

img

உலக கோப்பை 2019 : டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங் தேர்வு

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற வெஸ்ட்இண்டீஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான 42-வது லீக் ஆட்டம் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. இதனையடுத்து வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் களமிறங்கி பேட்டிங் செய்து வருகிறது.

ஆப்கானிஸ்தான் இதுவரை ஆடியுள்ள 8 ஆட்டங்களிலும் தோல்வியையே  சந்தித்துள்ளது. ஆப்கானிஸ்தான் குட்டி அணியாக இருந்தாலும் இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டங்களில் சுழற்பந்து வீச்சு தாக்குதல் மூலம் கடும் நெருக்கடி கொடுத்து வெற்றியை நெருங்கி வந்து தான் தோற்றது. வெஸ்ட் இண்டீஸ் அணி ஒரு வெற்றி, 6 தோல்வி, ஒரு முடிவில்லை என்று 3 புள்ளி மட்டுமே பெற்றுள்ளது. 
 

;