tamilnadu

img

இன்னும் 21 நாட்கள் -உலகக்கோப்பை திருவிழா 2019

தொடர்ந்தது ஆதிக்கம்


ஸ்டீவ் வாஹ், வார்னே, கில்கிறிஸ்ட், மெக்ராத் ஆகியோருடன் பின்னாளில் ரிக்கி பாண்டிங், மேத்யூ ஹைடன், ஆண்ட்ரூ சைமண்ட்ஸ், பிரட் லீ, பிளமிங், மைக்கேல் போவன், லீ மேன், மார்ட்டின்,மைக்கல் கிளார்க், மைக் ஹசி டேவிட் ஹஸி,டேவிட் வார்னர், ஸ்டீபன் ஸ்மித் உள்ளிட்டோரின் பங்களிப்பும் சேர்ந்து கொள்ள சுமார் 15 ஆண்டு காலம் ஆஸ்திரேலிய அணி அனைத்து விதமான போட்டிகளிலும் ஆதிக்கம் செலுத்தியது. இதற்கெல்லாம் தொடக்கம் 1999-ஆம் ஆண்டு நடந்த உலகக் கோப்பை என்றே சொல்லவேண்டும்.2003-ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற 7-வது உலகக்கோப்பை யின் துவக்க சுற்று ஆட்டத்தில் ‘பார்ட் டைம்’அணியான நெதர்லாந்து வீரர்களின் மிக மோசமான ஆட்டத்தாலும் இந்திய அணி கும்ப்ளே, ஜவகல் ஸ்ரீநாத் சிறப்பான பந்து வீச்சாலும் தட்டுத்தடுமாறி வெற்றி பெற்ற இந்திய அணி, இரண்டாவது போட்டியில் புதிய கேப்டன் ரிக்கிபாண்டிங் தலைமையிலான ஆஸ்திரேலியாவுடன் களம் கண்டது. 41 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்தநமது வீரர்கள் 125 ரன்களுக்குள் சுருண்டனர்.உலகின் நட்சத்திர வீரர்களான சச்சின், கங்குலி, டிராவிட் உள்ளிட்ட 7 பேர் ஒற்றை இலக்கை தாண்ட வில்லை. இந்த மோசமான ஆட்டத்தை தொலைக்காட்சிகளில் பார்த்துக்கொண்டி ருந்த இந்திய ரசிகர்கள் பொங்கி எழுந்த னர். இந்த சொதப்பல் ஆட்டத்திற்கு தானா உங்களை தென் ஆப்பிரிக்காவிற்கு அனுப்பி வைத்தோம் எனக் கொதித் தெழுந்தனர். அணித் தலைவர் சவுரவ் கங்குலி, சச்சின் உள்ளிட்டோரின் வீடுகள் மீது கற்களை வீசி தாக்குதல் தொடுத்தனர். ரசிகர்களின் இந்த செயல் அநாகரீகமானது என்றாலும், உலகக் கோப்பையை வென்று 20 ஆண்டுகள் கழித்து நடக்கும் தொடர் என்பதால் இந்த முறை எப்படியும் கோப்பையைத் தட்டி வருவார்கள் என்று ரசிகர்கள் வைத்திருந்த அதீத நம்பிக்கையாகும். 

அந்த தோல்விக்குப் பிறகு வெகுண்டெழுந்த இந்திய வீரர்கள் புதிய உத்வேகத்துடன் ஆட ஆரம்பித்தனர். புது வேகமும் எடுத்தனர். ஒரு போட்டியில் கூட தோல்வியைச் சந்திக்காமல் கம்பீரமாக இறுதி ஆட்டத்திற்கு நுழைந்தனர். உலகக் கோப்பையில் பங்கேற்ற இந்தியாவின் மிகச்சிறந்த தொடர் இதுதான் என்று சொல்லலாம். இதனால் கோடான கோடி ரசிகர்களிடம் தலை நிமிர்ந்து நின்றது இந்திய அணி. பலமிக்க பாகிஸ்தான், இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகளைத் தோற்கடித்த இந்திய அணி வீரர்கள் இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவையே எதிர்கொள்ள வேண்டியிருந்தது. எப்படியும்இந்திய அணி கோப்பையை வென்று பழிக்குப் பழி தீர்க்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்தது.

தென் அப்பிரிக்கா நாட்டின் புகழ்பெற்றஜோகன்னஸ்பர்க் மைதானத்தில் 32 ஆயிரம்ரசிகர்கள் ஒன்று திரண்டிருந்த அந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி, ஏற்கனவே திட்டமிட்டிருந்தபடி முதலில் பந்து வீச்சைத் தேர்வு செய்தது. கில்கிறிஸ்ட்-ஹைடன் துவக்கிய அதிரடி அந்த இன்னிங்ஸ் கடைசி பந்து வரை நீடித்தது. முதல் 10 ஓவரில் 100 ரன்களை கடந்தனர். 13வது ஓவரின் கடைசி பந்தில் தான் இந்த ஜோடியைப் பிரிக்க முடிந்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய அணித் தலைவர் ரிக்கி பாண்டிங் அன்றைய தினம் ‘ருத்ரதாண்டவம்’ ஆடிவிட்டார். 121 பந்துகளில் 8 சிக்கர்களுடன்140 ரன்கள் குவித்து கடைசி வரை களத்தில்நின்றார். அவருக்குத் துணையாக மார்ட்டின் 88 ரன்கள் எடுத்த அவுட்டாகாமல் இருந்தார் . இந்த இணை 204 ரன்கள் குவித்தது. கங்குலி, முகமது கைப், டிராவிட் ஆகிய 3 பேரைத் தவிர சேவாக், சச்சின், யுவராஜ்சிங் ஜாகீர்கான், ஆஷிஸ் நெஹ்ரா, விக்கெட் கீப்பர் மோங்கியா என 8 பேர் மாறி மாறி பந்து வீசியும் ஆஸ்திரேலியா வின் ரன் வேகத்தைக் கட்டுப்படுத்தவே முடியவில்லை. 50 ஓவர் முடிவில் 2 விக்கெட்டு களை மட்டுமே இழந்த ஆஸ்தி ரேலியா அணி 359 ரன்கள் குவித்தது.கடின இலக்கை சேசிங் செய்து இரண்டாவது முறையாகக் கோப்பையை வென்ற வேகத்தில் களமிறங்கிய இந்திய அணிக்கு துவக்கமே அதிர்ச்சி அளித்தது. லிட்டில் மாஸ்டர் சச்சின் 4 ரன்களில் நடையைக் கட்டினார். மெக்ராத், பிரட் லீ வேகத்தில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்து 39 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த இந்திய அணியால் 234 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. 125 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற ஆஸ்திரேலியா அணி மூன்றாவது முறையாகக் கோப்பையை வென்று ஆதிக்கத்தை நிலைநாட்டியது.

;