tamilnadu

img

குரூப்-2ஏ முறைகேடு: 20 பேர் தலைமறைவு

சென்னை, பிப். 3- டிஎன்பிஎஸ்சி குரூப்-2ஏ தேர்வு முறைகேடு விவகாரத்தில் 20 பேர் தலைமறைவாகி உள்ளனர். டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 மற்றும்  குரூப் 2ஏ தேர்வு முறைகேடு தொடர்  பாக சிபிசிஐடி காவல்துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தி யுள்ளனர். முறைகேட்டில் முக்கிய  நபர்களான இடைத்தரகர் ஜெயக் குமாரும், முதல் நிலை காவலர் சித்தாண்டியும் தலைமறைவாக உள்ள நிலையில், தனிப்படை அமைத்து அவர்களை காவல்துறை யினர் தீவிரமாக தேடி வருகின்ற னர். இந்நிலையில், குரூப் 2ஏ தேர்வு முறைகேட்டில் கைதான 5 பேரை தவிர்த்து மீதமுள்ளவர்களில் 20க்கும் மேற்பட்டோர் தலை மறை வாகியுள்ளதாகக் கூறப்படு கிறது. அந்த நபர்கள் செல்போன் எண்கள் மூலம் யார் யாரை தொடர்பு கொண்டனர்? அவர்க ளுக்கு வெளியில் இருந்து உதவி  செய்பவர்கள் யார் என்பன உள்ளிட்ட தகவல்களை, சைபர்  கிரைம் காவலர்கள் மூலம் சிபி சிஐடி காவலர்கள் சேகரித்துள்ள னர். இதனிடையே, குரூப் 4 தேர்வு முறைகேடு தொடர்பாக, தேர்வு எழுதிய 10 பேரிடம் சிபிசிஐடி காவல்  துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை எழும்பூரில் சிபிசிஐடி தலைமை அலுவலகத் தில் வைத்து 10 பேரிடமும் தனித்  தனியே விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதில் 2 பேர் காஞ்சி புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன.