ஆசம்கர், ஏப்.18- உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வரும் சமாஜ்வாதி கட்சித் தலைவருமான அகிலேஷ், ஆசம்கர்மக்களவைத் தொகுதியில் போட்டியிடுகிறார். இதற்காக வியாழனன்றுதனது ஆதரவாளர்களுடன் ஆசம்கர் மாவட்டஆட்சியர் அலுவலகத் திற்கு ஊர்வலமாகச் சென்ற அகிலேஷ், அங்குவேட்புமனுவைத் தாக்கல் செய்துள்ளார். பகுஜன் சமாஜ் கட்சி தேசிய பொதுச் செயலாளர் சதீஷ் சந்திர மிஸ்ரா வேட்புமனு தாக்கலில் கலந்து கொண்டுள்ளார்.