tamilnadu

img

மதுகுடித்து ஆட்டம் போட்ட எம்எல்ஏ மீண்டும் பாஜகவில்!

டேராடூன், ஆக.27- உத்தரகண்ட் மாநி லம் கான்புர் எம்எல்ஏ-வாக இருப்பவர் பிரணவ் சிங் சாம்பியன். பாஜக வைச் சேர்ந்த இவர், ஒரு கையில் மது பாட்டிலுட னும், மறுகையில் துப் பாக்கியை தூக்கிக் கொண் டும் ஆட்டம் போட்டு மாட்டிக் கொண்டார். இதற்காக கடந்த ஆண்டு பிரணவ் சிங் சாம்பியனை 6 ஆண்டுகளுக்கு கட்சியிலிருந்து நீக்கு வதாக பாஜக அறிவித்தது. இவருடன் சேர்த்து எம்எல்ஏ-க்கள் மகேஷ் நேகி, தேஷ்ராஜ் கர்ன்வால், பூரண சிங் பர்த்யால் ஆகியோரை யும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து பாஜக நீக்கி இருந்தது. இவர்களில் மகேஷ் நேகி, அண்மையில் பெண் ஒருவரை பாலியல் வல்லு றவுக்கு உள்ளாக்கி, மற்றொரு குற்றச்சாட்டிலும் சிக்கினார். இந்நிலையில் உத்தரகண்ட் மாநில பாஜக தலைவர் பன்சிதார் பகத் வீட்டில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், மதுபாட்டில் துப்பாக்கியுடன் குடித்துவிட்டு ஆட்டம் போட்ட பிரணவ் சிங் சாம்பியன் மீண்டும் பாஜக-வில் இணைக்கப்பட்டுள்ளார். பிரணவ் திருந்தி விட்டார் என்றும் அதனா லேயே அவருக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கியிருப்ப தாகவும், பாஜக மாநிலத் தலைவர் பன்சிதார் பகத் கூறி யுள்ளார்.