tamilnadu

img

3-ஆவதாக பிறக்கும் குழந்தைக்கு  வாக்குரிமை தரக்கூடாதாம்!

ஹரித்துவார்:
கார்ப்பரேட் சாமியார் ராம் தேவ், கடந்த 2018 செப்டம்பர் மாதம் ஹரித்துவாரில் பேசினார். அப்போது, “இந்தியாவில் யாராவது இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றால் அவர்களின் வாக்குரிமையை பறித்துவிட வேண்டும்” என்று கூறியிருந்தார்.

அதுமட்டுமன்றி, “நாட்டில் எங்களை (ராம்தேவ்) போன்று திருமணம் செய்து கொள்ளாமல் ‘பிரம்மச்சாரி’யாக இருப்பவர்களை அரசாங்கமே கௌரவப்படுத்தி; சிறப்புச் சலுகைகளை அளிக்க வேண்டும்” என்றார்.இதே கருத்தையே, 2019 ஜனவரி மாதம் அலிகாரில் பேசும்போதும் ராம்தேவ் வலியுறுத்தினார். வழக்கம்போல ‘2 குழந்தைகள் பெற்றவர்களின் வாக்குரிமையைப் பறிக்க வேண்டும்’ என்று கொதித்தார். “நாட்டில் மக்கள்தொகை அதிகரித்து வருவது தனக்கு கவலையளிக்கிறது” என்றும் கண்ணீர் விட்டார்.
தற்போது ராம்தேவின் நண்பரான மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ள நிலையில், “இந்தியாவில் பெருகி வரும் மக்கள் தொகையை கட்டுப்படுத்த குடும்பத்தில் மூன்றாவதாக பிறக்கும் குழந்தைகளுக்கு அரசு வாக்குரிமை அளிக்கக்கூடாது” என்று புதிய கருத்தை வைத்துள்ளார்.

இதில் விஷேசம் என்னவென்றால், முன்பு, 3 குழந்தை பெற்றவர்களின் வாக்குரிமையை பறிக்க வேண்டும் என்ற ராம்தேவ், தற்போது 3-ஆவதாக பிறக்கும் குழந்தைகளுக்கே வாக்குரிமை தரக்கூடாது என்று வன்மத்தைக் கொட்டியுள்ளார். இஸ்லாமியர்கள் அதிகமான குழந்தைகள் பெறுவதாகவும், அதனால் இஸ்லாமியர்களின் மக்கள்தொகை அதிகரித்து, இந்துக்களின் மக்கள் தொகை குறைந்துகொண்டே போவதாகவும் நீண்டகாலமாக சங்-பரிவாரங்கள் ஒரு பொய்ப்பிரச்சாரத்தை செய்து வருகின்றன. இதனை மனத்தில் வைத்தே ராம்தேவும் பேசியுள்ளார். ஆனால், அதை வெளிப்படையாக சொல்லாமல், மக்கள் தொகை பெருக்கம், வறுமை என்றெல்லாம் கதை விட்டுள்ளார்.

;