tamilnadu

img

போராட்டத்தில் ஈடுபட்டால் குற்றவியல் நடவடிக்கையா? ஜேக்டோ - ஜியோ பெருந்திரள் முறையீடு

உதகை, ஜூலை 29 – போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழி யர்கள் மீதான நடவடிக்கையை கைவிட வலியுறுத்தி ஜேக்டோ -   ஜியோவினர் பெருந் திரள் முறையீட்டில் ஈடுபட்டனர்.

ஜேக்டோ - ஜியோ நடத்திய வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது  தமிழக அரசு மேற்கொண்ட குற்றவியல் நடவடிக்கையை கைவிட வேண்டும். நிலுவையில் உள்ள 9 அம்சக் கோரிக்கை களைத் தீர்ப்பதற்கு ஜேக்டோ  ஜியோ மாநில நிர்வாகிகளை அழைத்துத் தமிழக முதல்வர் பேச வேண்டும்

என்பது உள்ளிட்ட பல்வேறு  கோரிக்கைகளை வலியுறுத்தி உதகையில் ஜேக்டோ ஜியோ அமைப்பினர் மாவட்ட ஆட்சியர், மாவட்ட முதன்மைக் கல்வி அலு வலர் உள்ளிட்ட அதிகாரிகளை சந்தித்து பெருந்திரள் முறையீட்டில் ஈடுபட்டனர். இந்த இயக்கத்திற்கு ஜேக்டோ ஜியோ  உயர்மட்டக்குழு உறுப்பினர் கி.முத்துக் குமார் தலைமை வகித்தார்.

மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ஏ.ஆர்.ஆஸரா, கே.அன்பழகன், பி.தினகரன், எஸ்.சங்கர், ஈ.மாரியப்பன், ஏ.சரவணகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

;