tamilnadu

புதிய குடியிருப்புகள் கட்ட ரூ.10 கோடி ஒதுக்கீடு

உதகை, ஜூலை 26 - கூடலூரில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்திற்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்புகளை புனரமைப் பதற்கு ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டம், கூடலூர் மார்த்தோமா நகரில் தமிழ் நாடு வீட்டு வசதி வாரியத்திற்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது.

இந்தக் குடியிருப்புகளில் அரசு ஊழியர் கள் குடியிருந்து வந்தனர். இந்த குடியிருப்புகள் போதிய பரா மரிப்பு இல்லாத காரணத்தால் சுவர்களில் விரிசல் ஏற்பட்டு பழுதடையத் தொடங்கியது. இந்நிலையில், குடியிருக்க பயந்து அரசு ஊழியர்கள் பலரும் குடியிருப்பை காலி செய்த னர். மேலும் இந்த குடியிருப்பை புனரமைக்க  வேண்டும் என்று  தொடர்ந்து பல ஆண்டுகளாக வலியுறுத்தி வந்த னர்.

இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழ் நாடு வீட்டு வசதி வாரிய இயக்குனர் ஆனந்தராவ் விஷ்ணு பாட்டீல் இந்த அடுக்குமாடி குடியிருப்புகளை ஆய்வு செய் தார். அப்போது அவரிடம் அரசு ஊழியர்கள் முறையிட்ட னர். இதனைத்தொடர்ந்து குடியிருப்புகளை புனர மைத்திட  நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதியளித்தார்.

தற்போது வீட்டு வசதி வாரியத்தின் மூலம் ரூ. 10 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் இடியும் நிலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடங்களை இடித்து புதிய குடியிருப்பு கட்டிடங்கள் கட்டவும் அதிகாரிகள் திட்ட மிட்டு வருகின்றனர்.

;