உடுமலை, ஜுலை 21- உடுமலை கிளை நூலகம் சார்பில் வாசிப்பை நேசிப் போம் என்ற கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. உடுமலை உழவர் சந்தை எதிரே உள்ள முழுநேர கிளை நூலகம் எண் இரண்டு சார்பில் பள்ளி மாணவ, மாணவி யர்களிடையே வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தும் வித மாக நூலகத்தில் இருந்து புத்தகங்கள் வழங்கி வாசிப் பின் அவசியம் குறித்து கலந்துரையாடல் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. இதன்ஒருபகுதியாக, உடுமலை எஸ்.எஸ்.ஏ.ஹேண்ட் இன்ஹேண்ட் இந்தியா உண்டு உறைவிடப் பயிற்சி மைய மாணவ, மாணவியர்களுக்கு வாசிப்பின் அவசியம் குறித்து விளக்கிடும் வகையில் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு உடுமலை நூலகத்தின் வாசகர் வட்ட துணைத் தலைவர்வி.கே. சிவக்குமார் தலைமை வகித்தார். இரண்டாம் நிலை நூலகர் வீ.கணேசன் வரவேற்றார். அரசு கலைக் கல்லூரி உதவி பேராசிரியர் திருமாவளவன், நூலகர் மகேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் வால்பாறை அரசு கலைக்கல்லூரி உதவி பேரா சிரியர் பெரியசாமி, உறைவிடப் பயிற்சி மைய மேலாளர் ரவிச்சந்திரன், ஆசிரியர்கள் கௌசல்யா, சசிகலா, வான் மதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.