tamilnadu

போதையற்ற தமிழகத்தை உருவாக்குவோம்

உடுமலை, ஜூன் 26- போதையற்ற தமிழகத்தை உருவாக்கு வோம் என கடலூர் குமார்-ஆனந்தன் நினைவு தினத்தில் உறுதி மொழியேற்பும், பொதுக்கூட்டம் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் புதனன்று தளி பேருந்து நிலையத்தில் நடைபெற்றது.   கடலூரில் 1999ஆம் ஆண்டு ஜூன் 27ந்  தேதி கள்ள சாராயகும்பலை தட்டிக்கேட்ட வாலிபர் சங்க தோழர்கள் குமார்-ஆனந்தன்  படுகொலை செய்யப்பட்டனர். இந்நாளில் தமிழகம் முழுவதும் போதை எதிர்ப்பு தின மாக அனுஷ்டிக்கப்படுகிறது. இதன்படி உடுமலை, தளி பேரூராட்சியின் வாலிபர் சங்கம் கிளையின் சார்பில்  புதனன்று பகத்சிங் செந்திடலில் ( பேருந்து நிலையம்)   போதை எதிர்ப்பு உறுதி மொழி ஏற்பும், பொதுக்கூட்டமும் நடைபெற்றது. இதில் போதையற்ற தமிழகத்தை உரு வாக்குவோம் என வாலிபர் சங்கத்தினர் உறுதி மொழியேற்றுக் கொண்டனர்.   முன்னதாக  வாலிபர் சங்க கிளை  தலைவர் வி.கருப்புசாமி தலைமை  தாங்கினார்.   கிளை செயலாளர் மதன்குமார்  வரவேற்றார். சங்கத்தின் கொடியை உடு மலை ஒன்றியத் தலைவர் தமிழ்த் தென்றல்  ஏற்றிவைத்தார். தகவல்  பலகையை  முன்னாள் மாவட்டக்குழு  உறுப்பினர்  சாந்திபிரியா திறத்து வைத்தார். இதை யடுத்து பொதுக்கூட்டம் நடைபெற்றது.  இதில் இந்திய ஜனநாயக வாலிபர்  சங்கத்தின் முன்னாள் மாநிலச் செய லாளர் எஸ்.கே. மகேந்திரன் சிறப்புரை யாற்றினார்.  மாவட்ட பொருளாளர் ஓம் பிரகாஷ், முன்னாள் தாலுகா பொரு ளாளர் பாலசுப்பிரமணியன், உடுமலை  ஒன்றியச் செயலாளர் லோகேஸ்வரன்,  சிஐடியு மாவட்ட துணைச் செயலாளர்  ஜெதீசன், முன்னாள் தாலுகா செயலாளர்  கி.கனகராஜ், விவசாய சங்க ராஜ கோபால்,  தளி முருகானந்தம், சுப்பிரமணி,  சுதா (எ) மாகலட்சுமி, குமரேச பாண்டியன், மோகன் பிரகாஷ், சரவணகுமார், பிரகாஷ் உள்ளிட்ட திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.