tamilnadu

img

சாத்தான்குளம் ஜெயராஜ், பென்னிக்ஸ் உடலில் அதிகளவு காயங்கள்

காவல்துறை மீது வழக்குப்பதிவு செய்யலாம்: நீதிமன்றம்

மதுரை, ஜூன் 30- சாத்தான்குளம் தந்தை- மகன் லாக்கப் படுகொலை சம்பவம் தொடர் பாக விசாரிக்க வந்த தன்னை மிரட்டல் விடுக்கும் வகையில் காவல்துறையினர் பேசியதாக மாவட்ட நீதிபதி மதுரை உயர்நீதிமன்ற பதிவாளரிடம் இமெயில் மூலமாக புகாரளித்தார். இந்தப் புகாரை ஏற்று குற்றவியல் அவமதிப்பு வழக்குப் பதிவு செய்த சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு, புகாருக்கு உள்ளான தூத்துக்குடி மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் குமார், துணை காவல் கண்காணிப்பாளர் பிரதாபன், சாத்தான்குளம் காவலர் மகாராஜன்  ஆகியோர் செவ்வாயன்று காலை நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது.  இதன்படி, தூத்துக்குடி காவல் கண்காணிப்பாளர் அருண்பால கோபாலன், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் குமார், துணைக் கண்காணிப்பாளர் பிரதாபன் ஆகியோ ரும் திருநெல்வேலி வட்டார டி.ஐ.ஜி பிரவீன் குமார் அபினவ்வும்   விசாரணை க்கு ஆஜராகினர். 

வழக்கை நீதிபதிகள் பி.என்.பிர காஷ், புகழேந்தி அமர்வு விசாரித்தது. அப்போது    “ஜெயராஜ், பென்னிக்ஸ் உட லில் அதிக காயங்கள் இருப்பது உடற் கூராய்வு அறிக்கையில் தெரிய  வந்துள்ளது. எனவே காவல்துறை யினர் மீது வழக்குப்பதிவு செய்யும் முகாந்திரம் உள்ளது” என்று உயர்நீதி மன்றம் தெரிவித்தது. மேலும், சிபிஐ பலவித அனுமதி களைப் பெற்று விசாரணை தொடங்கு வதற்குள் தடயங்கள் அழிக்கப்பட வாய்ப்பு உள்ளது. இந்த வழக்கை பொறுத்தவரை நீதிமன்றம் தாமதத்தை விரும்பவில்லை. பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினர் நீதியை எதிர்நோக்கி காத்துள்ளனர். ஆகவே, ஒரு நொடி கூட  வீணாகக்கூடாது.  சிபிஐ விசாரணையை தொடங்கும் வரை திருநெல்வேலி சரக டிஐஜி இந்த வழக்கு விசாரணையை ஏற்க இயலுமா? அல்லது திருநெல் வேலி சிபிசிஐடி  விசாரணையை கையில்  எடுக்க இயலுமா? என்பது குறித்து தகவல்பெற்று தெரிவிக்கவும் உத்தர விட்டனர்.  இந்நிலையில் வழக்கு நீதிபதிகள் முன்பாக மீண்டும் விசாரணைக்கு  வந்தது. அப்போது அரசுத்தரப்பில் திருநெல்வேலி சரக டிஐஜி விசாரிக்க லாம் எனத் தெரிவிக்கப்பட்டது. அதற்கு நீதிபதிகள், திருநெல்வேலி சரக டிஐஜி மூன்று மாவட்டங்களுக்கு பொறுப்பு என்பதால், கொரோனா தொற்று கால த்தில் அவருக்கு பல்வேறு பணிகள் இருக்கும்; அவரது  பணிகளை தளர்வு செய்து இந்த பணியை வழங்கினாலும், கொரோனா நோய்த்தொற்று காலத் தில் கூடுதல் சிரமமாகவே அமையும். ஆகவே, திருநெல்வேலி சிபிசிஐடி டிஎஸ்பி அனில்குமார்  வழக்கை  விசா ரிக்க வேண்டும். செவ்வாய்கிழமையே விசாரணையை தொடங்கவேண்டு மென உத்தரவிட்டனர்.

மேலும், சாத்தான்குளம் காவல் நிலையத்திற்கு விசாரணைக்குச் சென்ற நீதிபதியை அவமதித்தது, மிரட்டியது போன்றவை அதிர்ச்சியளிக்கிறது என்றும் நீதிபதிகள் கண்டித்தனர். இதற்கு அரசு வழக்கறிஞர், காவல் துறையினர் மனஅழுத்தத்தில் அப்படி செய்துவிட்டதாகக் கூறினர். இதை ஏற்க மறுத்த நீதிபதிகள் கூடுதல் காவல் கண்காணிப்பாளர், துணை கண்காணிப் பாளர் அறிக்கை சமர்ப்பிக்க உத்தர விட்டனர். இந்த வழக்கில் ஒரு பெண்  காவலர்  (காவல் சித்திரவதை பற்றி) கூறிய தகவலையும் நீதித்துறை மாஜிஸ்திரேட் அளித்திருந்தார். அதைப் பரிசீலனை செய்த உயர்நீதிமன்றம் அவருக்கும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கும் பாதுகாப்பு வழங்குமாறு மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டது. பின்னர் இவ்வழக்கு விசாரணையை ஜூலை 2-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

தூத்துக்குடி எஸ்.பி. மாற்றம்

இதனிடையே, சாத்தான்குளம் சம்பவத்தைத் தொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் பாலகோபாலன் மாற்றம்  செய்யப்பட்டு புதிய கண்காணிப்பாள ராக ஜெயக்குமார் நியமனம் செய்யப் பட்டுள்ளார். ஜெயக்குமார் விழுப்பும் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பொறுப்பு வகித்துள்ளார். அருண் பாலகோபாலன் காத்திருப்போர் பட்டி யலில் வைக்கப்பட்டுள்ளார். ஸ்டெர் லைட் துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 13  பேர் கொல்லப்பட்ட வழக்கில் அப்போது  மதுரை நகர் காவல் துணை ஆணைய ராக இருந்த  அருண் பாலகோபாலன் தூத்துக்குடிக்கு வந்து பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டவர். 

புதிய டிஜஜி

மேலும்  தென்மண்டல ஐ.ஜி. சண்முகராஜேஸ்வரன் செவ்வாய்க் கிழமை ஓய்வு பெறுகிறார். இதை யடுத்து, தென்மண்டல ஐ.ஜி. ஆக முருகன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

சிபிஐ விசாரணக்கு  ஆளுநர் ஒப்புதல்

இதனிடையே சாத்தன்குளம் படுகொலையை சிபிஐ விசாரிக்க தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஒப்புதல் அளித்துள்ளார்.

 

;