tamilnadu

img

அதிமுக எம்எல்ஏ தொகுதியில் தபால் வாக்குகளை எண்ண உயர்நீதிமன்றம் உத்தரவு

 உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை,அக்.1- சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற இன்பதுரை தொகுதியில் தபால் வாக்கு களை எண்ணுவதற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2016 ஆம் ஆண்டில் தமிழக சட்ட மன்றத்திற்கு நடைபெற்ற தேர்தலில், ராதாபுரம் தொகுதியில், திமுக சார்பில் அப்பாவு, அதிமுக சார்பில் இன்பதுரை  போட்டியிட்டனர். இதில், 49  ஓட்டுக்கள் வித்தியாசத்தில் இன்பதுரை வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இவரது வெற்றியை எதிர்த்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக அப்பாவு வழக்கு தொடர்ந்தார். அவர் தாக்கல் செய்துள்ள மனுவில், ஓட்டு எண்ணிக்கையின் போது, தபால் ஓட்டுக் களில் 203  ஓட்டுக்கள் நிராகரிக்கப்பட் டன. கெஜட் அதிகாரி சான்றளிக்க வில்லை. இந்த ஓட்டுக்களை எண்ணாமல் நிராகரித்தது தவறு என்று தெரிவிக்கப் பட்டது. இந்த வழக்கில் விசாரணை முடி வடைந்தது.ஆனால் தேதி குறிப்பிடா மல் தீர்ப்பை நீதிமன்றம் ஒத்திவைத்தது. இந்நிலையில் செவ்வாயன்று நீதிமன்றம் அளித்த தீர்ப்பில், தபால் வாக்குகளை தாக்கல் செய்ய  வேண்டும். தபால் வாக்குகளை மட்டும் மீண்டும் எண்ண வேண்டும். அக்டோபர் 4 ஆம் தேதிக் குள் தலைமை பதிவாளரிடம் தபால் வாக்குகளை சமர்ப்பிக்க வேண்டும் என்று  உத்தரவிட்டுள்ளது.

;