tamilnadu

img

‘விசாரணையை உயர்நீதிமன்றம் கண்காணிக்கும்’

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு


சென்னை,அக்.16- பொள்ளாச்சி பாலியல் வன் கொடுமை வழக்கு குறித்து சி.பி.ஐ. மேற்கொண்டு வரும் விசாரணை யை, சென்னை உயர்நீதிமன்றம்  கண் காணிக்கும் என்றும் இடைக்கால குற்றப்பத்திரிகை நகலை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். பொள்ளாச்சியில் கல்லூரி மாண விகள், பேராசிரியைகள், இளம்பெண் கள் உள்பட ஏராளமான பெண்களை ஒரு கும்பல் கடத்திச் சென்று பாலி யல் பலாத்காரம் செய்து, அதை வீடியோ படம் பிடித்து, காட்டி மிரட்டி பணம் பறித்து வந்தது. இதில் பாதிக்கப் பட்ட கல்லூரி மாணவி பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல்நிலை யத்தில் புகார் அளித்தார். இச்சம் பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதி ர்ச்சியை ஏற்படுத்தியது. இதில் துணை சபாநாயகரின் மகன்களுக்கும் தொடர்புள்ளதாக கூறப்படுகிறது. 

இந்த வழக்கு சி.பி.ஐ. விசார ணைக்கு மாற்றப்பட்டது. வழக்கின் சி.பி.ஐ. புலன் விசாரணையை சென் னை உயர்நீதிமன்றம் மேற்பார்வை யிட வேண்டும் என்று வலியுறுத்தி சாந்தகுமாரி என்பவர் உள்பட 10 பேர் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி வினீத் கோத்தாரி மற்றும் சர வணன் அமர்வு முன்பு விசாரணை க்கு வந்தது. அப்போது, இந்த வழக்கு விசாரணை தொடர்பான அறிக்கையை சிபிஐ வெளியிட வேண்டும் என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதற்கு சிபிஐ தரப்பில், பொள்ளாச்சி பாலியல் வன் கொடுமை விவகாரம் தொடர்பாக கடந்த ஏப்ரல் மாதம் சிபிஐ விசாரணை தொடங்கியதாகவும், இதுவரை 5 பேர் மீது வழக்குபதிவு செய்து கைது செய்யப்பட்டுள்ள தாகவும் தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கின் இடைக்கால குற்றபத்திரிக்கையை கடந்த செப்டம்பர் மாதம் 23 ஆம் தேதி கோயம்புத்தூர் மாவட்ட நீதிமன்றத் தில் தாக்கல் செய்திருப்ப தாகவும், மேலும் இந்த வழக்கின் விசாரணை  சரியான பாதையில் நடைபெற்று வருவதாகவும் சிபிஐ தரப்பில் கூறப் பட்டது. இதனையடுத்து, இந்த வழக்கை உயர்நீதிமன்றம் கண் ண்காணிக்கும் என்றும் இடைக்கால குற்றப்பத்திரிக்கையை சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். 

;