tamilnadu

img

குட்கா, பான் மசாலா போன்றவற்றை ஏன் முழுமையாக தடைசெய்யக்கூடாது - தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி

குட்கா, பான் மசாலா போன்றவற்றை ஏன் முழுமையாக தடைசெய்யக்கூடாது என தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.


கடந்த 2013ல் தமிழ்நாடு அரசு குட்கா, பான் மசாலா உள்ளிட்ட புகையிலை பொருள்களுக்கு தடைவிதித்தது. அந்த தடை ஆணையை ஒவ்வொரு ஆண்டும் நீட்டித்து வருகிறது. இந்நிலையில், புற்றுநோயை உருவாக்கும் குட்கா, பான் மசாலா போன்றவற்றை முழுமையாக தடைசெய்ய உத்தரவிடக்கோரி பொதுநல மனு ஒன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்டது.


இந்த மனுவை விசாரித்த நீதிபதி என்.கிருபாகரன் மற்றும் நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வு ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டும் குட்கா, பான் மசாலா போன்றவற்றிற்கு தடையை நீட்டிப்பதற்கு பதிலாக ஏன் முழுமையான தடையை தமிழக அரசு கொண்டுவரக்கூடாது என கேள்வி எழுப்பினர். மேலும், இதுகுறித்து மாநில தலைமை செயலாளர் மற்றும் சுகாதாரத்துறை செயலாளர் பதிலளிக்கக்கோரி நீதிமன்றம் உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 2 வார காலத்திற்கு ஒத்திவைத்துள்ளது.

;