tamilnadu

img

சச்சின் பைலட்டுக்கு ஆதரவாக மத்திய அரசு வழக்கறிஞர்

ஜெய்ப்பூர், ஜூலை 16-  எம்எல்ஏ தகுதி நீக்க நோட்டீசை எதிர்த்து ராஜஸ் தான் காங்கிரஸ் அரசில் துணை முதல்வராக இருந்த  சச்சின் பைலட் உயர்நீதி மன்றத்தில் வழக்குதொடுத் துள்ளார். இந்த வழக்கில் பைலட்டுக்கு ஆதரவாக மத்திய அரசின்  அட்டர்னி ஜெனரல் முகுல் ரோத்தகி ஆஜராக உள்ளார். ராஜஸ்தான் காங்கிரஸ் தலைவராகவும் துணை முதல்வராகவும் இருந்த சச்சின் பைலட், பாஜகவுடன் இணைந்து முதல்வர் அசோக் கெலாட் அரசை கவிழ்க்க சதி செய்ததாக எழுந்த புகாரால் ஜூலை 14 அன்று காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். 

மேலும் காங்கிரஸ் சட்ட மன்ற உறுப்பினர்களின் கூட் டம் இருமுறை நடந்தபோதும் பைலட்டும், அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்களும் புறக்கணித்ததால் சட்ட மன்ற உறுப்பினர் பதவியில் இருந்து ஏன் தகுதி நீக்கம் செய்யக் கூடாது என்று ராஜஸ்தான் சபா நாயகர் நோட்டீஸ் அனுப்பி யிருந்தார். அதில் கட்சி விரோத நடவடிக்கைகள், கொறடா உத்தரவு மீறல்  குறித்து வெள்ளிக்கிழமைக் குள் பதிலளிக்க அவகாசம் அளிக்கப்பட்டிருந்தது.  இந்நிலையில் சச்சின் பைலட்டும், அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்களும் தங்களுக்கு சபாநாயகர் அனுப்பிய நோட்டீசை எதிர்த்து ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளனர். சச்சின் பைலட்டுக்குப் பின்னால் பாஜக இருக்கிறது என்று காங்கிரஸார் கூறி வந்த நிலையில் இந்த வழக்கில் பைலட்டுக்காக ஆதரவாக முகுல் ரோத்தகி ஆஜராகிறார். 2014 ஆம்  ஆண்டில் மோடி ஆட்சிக்கு  வந்த பின்னர் அட்டர்னி  ஜெனரலாக நியமிக்கப்பட்ட வர் முகுல் ரோத்தகி ஆவார். இந்த வழக்கில் காங்கிரஸ் சார்பில் அபிஷேக் மனு சிங்வி ஆஜராவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.