tamilnadu

img

அனைத்து ஆட்டோ ஓட்டுநர்களுக்கும் ரூ.10 ஆயிரம் நிவாரணம் வழங்கிடுக!

உயர்நீதிமன்றத்தில் சிஐடியு ஆட்டோ தொழிலாளர் சம்மேளனம் வழக்கு

சென்னை,ஏப்.23-  அனைத்து ஆட்டோ ஓட்டுநர் களுக்கும் அரசு ரூ.10 ஆயிரம் நிவார ணம் வழங்க வேண்டும் என்று கோரி உயர்நீதிமன்றத்தில் சிஐடியு ஆட்டோ தொழிலாளர் சம்மேளனம் சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதுகுறித்து சம்மேளனத்தின் பொதுச்செயலாளர் எம்.சிவாஜி வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது: 

கொரோனா என்ற கொடிய நோய் பரவலை தடுக்க 40 நாட்களுக்கு இரண்டு முறை ஊரடங்கு உத்தரவு மத்திய, மாநில அரசுகளால் அறிவிக்கப் பட்டது. தமிழக அரசு சார்பில் முதல் துறையாக ஆயிரம் ரூபாயும் அரசி பருப்பு உள்ளிட்ட பொருட்களும் நல வாரியத்தில் உள்ளவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இரண்டாவது முறையாகவும் ரூ.1000 நலவாரியத்தில் உள்ளவர்களுக்கு மட் டும் வழங்கப்படுவதாக அறிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் சுமார் 10 சத வீத ஆட்டோ தொழிலாளர்கள் மட்டுமே நலவாரியத்தில் பதிவு செய்திருப்பார் கள். எனவே அனைவருக்கும் நிவார ணம் கிடைக்கும் வகையில் வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் கணக்கெடுத்து வழங்க வேண்டும். நிவா ரணம் ஒவ்வொரு முறைக்கும் தலா 5000 வீதம் ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு ஆறு முறை “இ” மெயில் மூலம் மனுக்கள் அனுப்பப் பட்டன. 

கடுமையான நெருக்கடியை சந்தித்து வரும் ஆட்டோ, இதர மோட் டார் தொழிலாளர்கள் மற்றும் முறை சாரா தொழிலாளர்கள் அனைவருக்கும் இந்த நிவாரணம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளர் சம்மேளனம் சார்பில் கொடுக்கப்பட்ட மனுக்கள் பரிசீலிக்கப் படவில்லை. 

பாதிக்கப்படுபவர்களின் நிலையை கவனத்தில் கொண்டு அனைவருக்கும் நிவாரணம் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். நிவாரணத்தை உயர்த்தி வழங்க வேண்டும் என்று உயர்நீதி மன்றம் பொதுவான வழிகாட்டல் செய்த போதும் அவை நடைமுறைப்படுத்த வில்லை. எனவே அனைத்து ஆட்டோ ஓட்டு நர்கள் ,இதர ஓட்டுநர்கள், முறைசாரா தொழிலாளர்கள் என அனைவருக்கும் நிவாரணம் வழங்குவதை மத்திய, மாநில அரசுகள் உறுதி செய்திட வேண்டும் என்று வலியுறுத்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளர் சம்மேளனம் (சிஐ டியு) சார்பில் உயர்நீதிமன்ற வழக்கறி ஞர்கள் அஜய்கோஷ், மனோகரன் ஆகி யோர் மூலம் மனுத்தாக்கல் செய்யப் பட்டுள்ளது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

;