tamilnadu

img

தஞ்சை கோவில் குடமுழுக்கு வழக்கு ஒத்திவைப்பு

சென்னை,ஜன.21- தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்குப் பணி களை கண்காணிக்க, தலைமைச் செயலாளர் தலை மையில் 21 அதிகாரிகள் கொண்ட குழு அமைக் கப்பட்டுள்ளது. இந்நிலையில், குடமுழுக்கை தமி ழில் நடத்தக் கோரிய வழக்கை, வருகிற 27ஆம்  தேதிக்கு உயர்நீதிமன்ற கிளை ஒத்திவைத்துள்ளது.  தஞ்சாவூர் பெரிய கோவில் குடமுழுக்கு விழா,  வருகிற பிப்ரவரி மாதம் 2ஆம் தேதி நடைபெறுகிறது. 10 லட்சத்திற்கும் அதிகமானோர் குடமுழுக்கில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.  இதுதொடர்பாக, தமிழ்நாடு அரசு வெளி யிட்டுள்ள அறிக்கையில், தஞ்சை பெரிய கோவி லில் கும்பாபிஷேகப் பணிகளை கண்காணிக்க 21 அதிகாரிகள் கொண்ட குழு அமைக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தலைமைச் செயலாளர் தலைமையிலான குழுவில், அரசின் பல்வேறு துறைகளின் செயலா ளர்கள், மத்திய தொல்லியல் துறை கண்காணிப்பா ளர், தெற்கு ரயில்வே பொது மேலாளர், தஞ்சாவூர்  மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ள னர்.

மேலும், தமிழ்நாடு காவல்துறை டிஜிபி, தீய ணைப்புத்துறை டிஜிபி, தஞ்சாவூர் மாவட்ட காவல்  கண்காணிப்பாளர் உள்ளிட்டோரும் குழுவில் இடம்பெறுகின்றனர். இதனிடையே, தஞ்சை பெரிய கோவில் குட முழுக்கு விழாவினை தமிழ் மொழியிலேயே நடத்த  உத்தரவிடக் கோரி உயர்நீதிமன்ற கிளையில் தொட ரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதிகள் துரை சுவாமி, ரவீந்திரன் அமர்வு, கடைசியாக குட முழுக்கு விழா எந்த மொழியில் நடத்தப்பட்டது? என  கேள்வி எழுப்பியது. சமஸ்கிருதத்தில் நடத்தப்பட்டது என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அப்போது, தமிழில்  அர்ச்சனை செய்ய நபர்கள் இல்லை என்றும், ஆனால், தற்போது, சைவ அர்ச்சனை பயிற்சி பெற்ற வர்கள் உள்ளதால், அவர்களைக் கொண்டு நடத்த லாம் என்றும் மனுதாரர் தரப்பில் தெரி விக்கப்பட்டது. அப்போது, ஆகம விதிகளின்படியே குட முழுக்கு நடைபெற உள்ளதாக, இந்து அறநிலை யத்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் தெரி வித்தார். இதையடுத்து, பிரகதீஸ்வரர் ஆலய நிர்வா கத்தினரை எதிர்மனுதாரராக சேர்க்க மனுதாரருக்கு உத்தரவிட்டு வழக்கை வருகிற 27ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

;