tamilnadu

img

அயனாவரம் சிறுமிவழக்கில் 15 பேர் குற்றவாளிகள்: நீதிமன்றம்

சென்னை,பிப்.1- அயனாவரம் சிறுமி பாலியல் கொடுமை வழக்கில் 15 பேர் குற்றவாளிகள் என சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. சென்னை அயனாவரத்தில் உள்ள தனியார் அடுக்குமாடி குடி யிருப்பில், 11 வயது சிறுமி பாலி யல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி யது. காவல்துறை விசாரணை யில் சிறுமி தொடர்ந்து பல நாட்களாக பாலியல் வன் கொடுமை செய்யப்பட்டது தெரிய வந்தது. இது தொடர்பாக அடுக் குமாடி குடியிருப்பின் லிப்ட் ஆப ரேட்டர் ரவிக்குமார், சுரேஷ், எரால்பிராஸ், அபிஷேக், சுகு மாரன், முருகேசன், பரமசிவம், ஜெய்கணேஷ், பாபு, பழனி, தீனதயாளன், ராஜா, சூர்யா, குணசேகரன், ஜெயராமன், உமாபதி ஆகிய 17 பேரை போலீ சார் கடந்த 2018 ஆம் ஆண்டு ஜூலை மாதம் கைது செய்தனர். இவர்கள் மீது போக்சோ சட்டம் மற்றும் பாலியல் வன் கொடுமை, காயம் ஏற்படுத்துதல், கும்பல் பாலியல் வன்கொடுமை, கொலை முயற்சி, கொலை மிரட்டல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க 2018 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 5 ஆம் தேதி சென்னை மாநகர காவல் ஆணை யர் விஸ்வநாதன் உத்தரவிட்டார்.

17 பேர் மீதான குண்டர் சட்டத்தை 2019 ஆம் ஆண்டு ஜனவரி 11 ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. எனினும் 17 பேருக்கும் ஜாமீன் வழங்கப்படாததால் தொடர்ந்து கடந்த ஒன்றரை வருடமாக புழல் சிறையில் அடைக்கப் பட்டுள்ளனர். மிகவும் நுட்பமான இந்த வழக்கில் அரசு தரப்பு சிறப்பு வழக்கறிஞராக ரமேஷ் நியமிக்கப்பட்டு, சிறப்பு நீதிமன்ற நீதிபதி மஞ்சுளா முன்பு வழக்கு விசாரணை நடந்தது. கடந்த ஆண்டு (2019) ஜனவரி மாதம் தொடங்கி டிசம்பர் வரை 11 மாதங்கள் விசாரணை நடை பெற்றது. தீர்ப்பு தேதி குறிப்பிடா மல் ஒத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கு விசாரணை யின் போது, குற்றம் சாட்டப்பட்ட வர்கள் தரப்பில் 7 சாட்சிகளும், 36 அரசு தரப்பு சாட்சிகளும் விசாரிக்கப்பட்டு, 120 ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட் டன. குற்றம்சாட்டப்பட்ட 17 பேரில் பாபு என்பவர் உடல்நலக் குறை வால் உயிரிழந்து விட்டார். மீத முள்ள 16 பேருக்கு எதிரான வழக்கில் சனிக்கிழமையன்று (பிப்.1) தீர்ப்பு வழங்கப்பட்டது. இதையொட்டி 16 பேரும் காவல் பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர். சிறிது நேரத்தில் நீதிபதி மஞ்சுளா தீர்ப்பை வாசித்தார். குற்றம் சாட்டப்பட்ட தோட்டக்காரர் குணசேகரன் விடுவிக்கப்பட்டார். மற்ற 15 பேரும் குற்றவாளிகள் என தீர்ப்பு கூறினார். தண்டனை விவரங்கள் நாளை அறி விக்கப்படுகிறது.

;