கொரோனா தொற்று உலகம் முழுவதும் பரவிக் கொண்டிருக்கும் காலத்தில், பல நாடுகளும் தனது ஊரடங்கில் தளர்வுகள் அறிவித்துக் கொண்டிருக்கிறது. ஒரு சில நாடுகளில் பள்ளிகள் ஆரம்பிக்க ஆலோசித்து வருகிறது.இந்த சூழ்நிலையில் உலக சுகாதார ஆணையம், அனைவருக்கும் அச்சத்தை ஏற்படுத்தும் ஒரு தகவலை அறிவித்துள்ளது.
உலகளவில் 818 மில்லியன் மாணவர்கள் படிக்கும் பள்ளிகளில் போதிய கை கழுவும் (சோப்பு மற்றும் தண்ணீர்) வசதி இல்லை என்று அதிச்சியூட்டும் தகவலை மக்களிடம் (ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம்) UNICEF மற்றும் WHO ( உலக சுகாதார ஆணையம்) அறிவித்துள்ளது .இது உலகில் 5 -ல் 3 சதவீத பள்ளிகளில் இந்த குறை உள்ளதாக அந்த அறிக்கை தெரிவித்துள்ளது.
818 மில்லியன் மாணவர்களில் , 355 மில்லியன் மாணவர்கள் படிக்கும் பள்ளிகளில் கை கழுவ சோப்பு கிடையாது.462 மில்லியன் மாணவர்களுக்கு கை கழுவ தண்ணீர் கிடையாது எனறு அதன் அறிக்கை தெரிவிக்கிறது.இதில் முக்கியமாக நான்கில் மூன்று குழந்தைகள் உள்ள 60 நாடுகளில் அடிப்படை சுகாதார வசதிகள் கிடையாது என்று உலக சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது.
இதை பார்க்கும் போது கை கழுவ தண்ணீர் இல்லாத நிலையில் உள்ள குழந்தைகளுக்கு எப்படி குடிக்க தண்ணீர் கிடைக்கும் என்ற கேள்வி எலாமல் இல்லை.இதை உணர்ந்து உலக நாடுகள் கொரோனா பரவலை கட்டுப்படுத்திய பின்னர் பள்ளிகளை திறக்க வேண்டும் அல்லது பள்ளிகளை திறப்பதற்கு முன்னரே அடிப்படை வசதிகள் உள்ளனவா..? என்று ஆராய்ந்து வசதிகளை ஏற்படுத்திக்கொடுத்த பின்னர் பள்ளிகளை திறப்பது நாட்டிற்கும், மாணவர்களுக்கும் நல்லது.