tamilnadu

img

விக்கிலீக்ஸ் நிறுவனம் ஜூலியன் அசாஞ்சே உயிருக்கு ஆபத்து

ஐ.நா:
விக்கி லீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சேயின் சித்ரவதை மற்றும் பிற கொடூரமான மனிதாபிமானமற்ற அல்லது இழிவானசிகிச்சையால் அவர் உயிர் இழக்கக் கூடும் எனஐ.நா. நிபுணர் ஒருவர் எச்சரித்துள்ளார்.

அமெரிக்காவின் ராணுவ சித்ரவதை ரகசிய முகாம்களைப் பற்றி ‘விக்கி லீக்ஸ்’இணையதளத்தில் வெளியிட்டு ஜூலியன் அசாஞ்சே (47) ரகசியங்களை அம்பலப்படுத்தினார். இதையடுத்து அமெரிக்கா அசாஞ்சேவைகைது செய்து தண்டனை வழங்க துடித்தது. அதனால் அவர் அமெரிக்காவில் இருந்து வெளியேறி லண்டனில் இருக்கும் ஈக்வடார் நாட்டு தூதரகத்தில் தஞ்சமடைந்தார்.ஆஸ்திரேலியரான அசாஞ்சே அமெரிக்ககுடியுரிமை பெற்றிருந்தார். இந்நிலையில் அமெரிக்கா ஈக்வடார் நாட்டுக்கு பல்வேறு வகையில் நிர்ப்பந்தம் கொடுத்தது.2012 ஆம் ஆண்டிலிருந்து 6 ஆண்டுகள் ஈக்வடார் தூதரகத்தில் தஞ்சமடைந்திருந்த அசாஞ்சே 2018 இல் வெளியேற்றப்பட்டார். அதையடுத்து இங்கிலாந்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தது. ஆயினும் அமெரிக்கா தன்னிடம் ஒப்படைக்க வேண்டுமென இங்கிலாந்துக்கு நெருக்கடி கொடுத்து வருகிறது. அதனால் பிரிட்டனில் இருந்து அமெரிக்காவிற்கு ஒப்படைக்கப்படும் நிலையை எதிர்நோக்கியுள்ள அசாஞ்சேக்கு உடல்நலம்
பாதிக்கப்பட்டுள்ளது. அவருக்கு தற்போதுஅளிக்கப்படும் கொடூரமான, மனிதாபிமானமற்ற அல்லது இழிவான சிகிச்சையே அவரதுஉயிருக்கு ஆபத்தாக அமையும் என ஐ.நா.வின் நிபுணர் நீல்ஸ் மெல்சர் தெரிவித்து உள்ளார்.அவர் மேலும் கூறியிருப்பதாவது:

கடுமையான கவலை, மன அழுத்தம் மற்றும் உதவியற்ற தன்மை ஆகியவற்றால் அசாஞ்சேயின் உடல்நலம் கொஞ்சம் கொஞ்சமாக நலிவடைந்து வருகிறது. துல்லியமாக என்ன நடக்கும் என உறுதியாகக் கணிப்பது கடினம் என்றாலும் அது மாரடைப்பு அல்லதுநரம்பு தளர்வு சம்பந்தப்பட்ட உயிருக்கு ஆபத்தான சூழ்நிலையாக விரைவாக உருவாகலாம்.தனிமை மற்றும் கண்காணிப்பின் அடக்குமுறை நிலைமைகளின் கீழ் அவர் தொடர்ந்து தடுத்து வைக்கப்பட்டுள்ளார். அவரது சட்ட ஆலோசனை மற்றும் ஆவணங்களுக்கான அணுகல் கடுமையாக தடைப்பட்டுள்ளது.அசாஞ்சேயின் உடல்நலம் மற்றும் கவுரவத்தைப் பாதுகாக்க லண்டன் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஏற்கனவே நான் கோரிக்கை வைத்து இருந்தேன்.ஆனால் இங்கிலாந்து அரசு அதை ஏற்கமறுத்து அசாஞ்சேயின் உரிமைகள் மற்றும்ஒருமைப்பாட்டை முற்றிலும் அவமதிக்கிறது. எனது முறையீட்டில் மருத்துவ அவசரம் மற்றும் தீவிரத்தன்மை இருந்தபோதிலும், சர்வதேச சட்டத்தின் கீழ் தேவைப்படும் விசாரணை,காவல் மற்றும் நிவாரணம் ஆகியவற்றின் எந்தநடவடிக்கைகளையும் இங்கிலாந்து மேற்கொள்ளவில்லை.அவர் உடனடியாக விடுவிக்கப்பட்டு அவரது உடல்நிலையை மீட்டெடுக்கவும் அவரது தனிப்பட்ட மற்றும் தொழில் வாழ்க்கையை மீண்டும் ட்டமைக்கவும் அனுமதிக்க வேண்டும்.சித்ரவதை மற்றும் கொலை உள்ளிட்ட கடுமையான மனித உரிமை மீறல்கள் பற்றியதகவல்களை வெளியிட்டதற்காக அமெரிக்கஅரசு அசாஞ்சே மீது வழக்குத் தொடர்ந்தாலும், இந்த குற்றங்களுக்கு பொறுப்பான அதிகாரிகள் தொடர்ந்து தண்டனையை அனுபவிக்கவில்லை எனவும் நீல்ஸ் மெல்லர் கூறியுள்ளார்.

;