tamilnadu

img

ஊரடங்கு நீட்டிக்க வாய்ப்பு

மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன் சூசகம்

புதுதில்லி, ஏப்.10- ஊரடங்கை நீட்டிக்க வாய்ப்புள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார். கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்ட 21 நாட் கள் ஊரடங்கு வரும் 14-ஆம் தேதியோடு நிறைவு பெறுகிறது. 

ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வெள் ளிக்கிழமையோடு 17 நாட்கள் நிறைவ டைந்துள்ள நிலையில், கொரோனா வைர சால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்தே வருகிறது. இதனால், 14-ஆம் தேதிக்குப் பிறகு ஊரடங்கு நீட்டிக்கப்படுமா? அல்லது கட்டுப்பாடுகளுடன் தளர்த்தப்படுமா? என் பது கேள்வியாக உள்ளது.  கொரோனா வைரஸ் பரவலின் வேகம் குறையாததால், ஊரடங்கு நீட்டிக்க வேண் டும் என்று பல்வேறு மாநிலங்களில் இருந்து கோரிக்கைகள் வந்துள்ளதாக ஏற்கனவே மத்திய அரசு கூறியுள்ளது. 

இந்த நிலையில் வெள்ளிக்கிழமை புது தில்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன், “அனைத்து மாநில அரசுகளும் ஊர டங்கை முழுமையாகப் பின்பற்ற வேண்டும். சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஊர டங்கின் மூன்றாவது வாரத்தில் நாம் உள் ளோம். கொரோனா பாதிப்பு குறைய ஐந்து முதல் ஆறு வாரங்கள் தேவை என்று சர்வ தேச அனுபவங்கள் கூறுகின்றன.  கொரோனாவை எதிர்த்துப் போராட மாநிலங்களுக்கு ரூ.4,100 கோடி நிதி ஒதுக் கப்பட்டுள்ளது. நாட்டு மக்கள் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் என்றார்.

;