tamilnadu

img

குடிமராமத்து திட்டத்தின் கீழ் வாய்க்கால் பராமரிப்பு பணிகள் துவக்கம்

கோபி, மே 30-  ஈரோடு மாவட்டத்தில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் வாய்க்கால் பராமரிப்பு பணி கள் துவக்கப்பட்டு நடைபெற்று வருகிறது. ஈரோடு மாவட்டத்தில், வாய்க்கால் பரா மரிப்பு பணிகளுக்கு கீழ்பவானி பாசன  திட்டத்தில் பாசன சபைக்கு ஒதுக்கப்பட் டுள்ள ரூ.45 லட்சம் செலவில், பாண்டி யம்பாளையம் பகுதியில் சேதமடைந்துள்ள சந்திராபுரம் சாலையின் குறுக்கேயுள்ள பழுதடைந்த டிராப் சீரமைப்பு செய்து அக லப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் ரூ.28 லட்சம் செலவில் கவுந்தப்பாடி பிரிவு வாய்க்காலில் நீர்கசிவு பெருமளவு ஏற்படும் பகுதியில் இருபுறமும் பாதுகாப்பு சுவர் கட்டும் பணிகள் நடை பெற்று வருகிறது. கூகலூர் பிரிவு வாய்க்கா லில் ரூ.39 லட்சம் செலவில் 7-வது மைலில் சக்கரபாளையம் கிளை வாய்க்காலில் மண்கரைகள் சேதமடைந்த பகுதிகளில் பாதுகாப்பு சுவர் கட்டும் பணிகள் நடை பெற்று வருகிறது. பாசன சபைகள் மூலம் செய்யப்படும் பணிகளை பவானி வடிநில கோட்ட கண்காணிப்பு பொறியாளர் எஸ்.காசி லிங்கம், செயற்பொறியாளர் வே.தாமோ தரன், உதவிப் செயற்பொறியாளர் டி.சிவக்குமார், உதவிப் பொறியாளர்கள் எம்.மணிகண்டன், கி.பொன்னுசாமி ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.

;