tamilnadu

img

பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறையை தடுத்திடுக

ஈரோடு:
தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் பாலியல் வன்முறையை தடுக்க வேண்டும் என்று ஈரோடு பெருந்துறையில் நடைபெற்ற பெண்கள் மீதான பாலியல் வன்முறைக்கெதிரான இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாநில சிறப்பு மாநாடு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு நடக்கும் பாலியல் வன்முறை பற்றிய செய்திகள்இல்லாத நாளே இல்லை என்பதாக மாறியுள்ளது தமிழகம்.  அன்றாடம் வன்முறையே வாழ்க்கையாகி போனதால் பெண்களின் நிலை எப்படிதான் இருக்கும். இதை எண்ணும் போது சாதாரண மனமும் பதைபதைக்கிறது.வன்முறையற்ற வாழ்க்கை என்பது ஒரு அடிப்படை உரிமை. ஆனால் எத்தனை எத்தனை டுமைகள்? சிறு குழந்தைகளையும் விட்டுவைக்கவில்லை இந்த பாலியல் வக்கிரம். இயல்பாக வளர வேண்டிய குழந்தைகள் பலர் டுமையாக கொல்லப்படுவதை பார்க்கிறோம். சென்னையில் எரிக்கப்பட்டு, சேலத்தில் வெட்டப்பட்டு, தலை உடைக்கப்பட்டு, தூக்கில் தொங்கவிடப்பட்டு என குழந்தைகளின் மீது நடந்து வரும் கொடூரமும் அதன் வடிவங்களும் எந்த ஒரு சமூகத்திலும் இப்படி நடக்கவே கூடாது. ஆனால் நாம் இந்த கொடூரங்களை பார்த்து தான் வந்திருக்கிறோம்.
குழந்தைகள் ஒரு புறம், பெண்கள் மறுபுறம் என எங்கு சென்றாலும் பாலியல் வக்கிரங்களுக்கு குறைபாடு இல்லை. ஒவ்வொரு நாளும் திகரித்துக்கொண்டே வருகிறதே தவிர குறைந்தபாடில்லை. எப்படி புரிந்து கொள்வது பொள்ளாச்சியில் நடந்த கொடூரத்தை? பொள்ளாச்சி கொடூரம் என்பது நம் சமூகத்தில் பெண்களின் நிலையை தான் வெளிப்படுத்தியுள்ளது. பொள்ளாச்சி தொடங்கி சில மாதங்களிலேயே ஈரோடு, காஞ்சிபுரம், பெரம்பலூர் என பல மாவட்டங்களில் இதைப் போன்று நடந்த டூரங்களின் உண்மை வெளிவந்து கொண்டிருக்கிறது. 

காலம்காலமாக பெண்களை சமமாக நடத்தாமல், பெண்களுக்கு பொதுத்தளங்களில் வாய்ப்புகள் மறுக்கப்பட்டதன் விளைவு அச்சம், மடம், நாணம் என்றும் அடக்கம் ஒடுக்கம் ன்று பயிற்றுவித்ததன் விளைவு, நூற்றுக்கணக்கான பாதிக்கப்பட்ட பெண்கள் வெளியில் கூட சொல்லவில்லை. யாரிடமும் கூறவும் முடியாமல் பாலியல் கொடூரங்களில் இருந்து தப்பவும் டியாமல் என நம் பெண்களை எந்த நிலைக்கு தள்ளி உள்ளோம்? இது மட்டுமா காதலித்தால் பெற்றோர்களால் கொல்லப்படுகிறார்கள். காதலிக்க விருப்பமில்லை என்றால் வற்புறுத்திய ஆணால் கொல்லப்படுகிறார்கள். ஆசிட் வீச்சு,  கடத்தி பாலியல் வன்முறை, கழுத்தறுப்புஎன பல வடிவங்களில் பெண்கள் பாதிக்கப்படுவதை பார்க்கிறோம். பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமை கடந்த  மூன்றே ஆண்டுகளில் 67 சதவீதம் தமிழகத்தில் அதிகரித்து உள்ளது. 

வீட்டில் ஆரம்பித்து பள்ளி, கல்லூரி, வேலை செய்யும் பணியிடம், பயணிக்கும் வாகனங்கள், பேருந்துகள், பொது இடங்கள், இப்போது சமூக
வலைத்தளம்  என பெண்கள் மீதான பாலியல் வன்முறை தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது. எனவே,

1.பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளை பாதுகாக்கும் சட்டங்கள் அனைத்தையும் கறாராக அமல்படுத்த வேண்டும்.

2.பெண்கள் பாதுகாப்பிற்கான மத்திய அரசின் நிர்பயா நிதியை தமிழக அரசு முறையாக பெற்று அதை பெண்கள் பாதுகாப்பிற்காக பயன்படுத்த வேண்டும்.

3.காவல்துறையினர், அரசு தரப்பு வழக்கறிஞர்கள், ஆசிரியர்கள், அரசு சார் நிறுவனங்கள்என அனைவருக்கும் பாலின சமத்துவ கண்ணோட்டம் பெறும் வகையில் தொடர் பயிற்சி அளிக்கப்பட வேண்டும்.

4. பாடத்திட்டங்களில் பாலின சமத்துவக் கருத்துகள் இடம்பெற வேண்டும். 

5.அரசே முன்வந்து பாலியல் கொடுமைகளைத் தடுத்து நிறுத்த பொதுமக்களிடம்  பிரச்சாரம் நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

6.பாதிக்கப்படும் பெண்கள் முன்வந்து தங்கள் பிரச்சனைகளை கூறவும்,  அவர்களுக்கு உரிய சட்டப்படியான தீர்வை பெற்றுத்தரவும் நடவடிக்கை எடுத்திட வேண்டும்.

7.வேலை செய்யும் பணியிடங்களில் பாலியல் வன்முறைக்கு எதிரான புகார் கமிட்டி அமைத்திடவும், கல்வி நிலையங்களில் பாலினம் குறித்த புரிந்துணர்வு கமிட்டி அமைத்திட வேண்டும்.

8.பெண் சமத்துவத்திற்கான சமூகம் உருவாகிட, அரசு மற்றும் இதர சமூக அமைப்புகளும் இணைந்து செயலாற்ற வேண்டும் என இம்மாநாடு வலியுறுத்துகிறது.

;