tamilnadu

img

தனியார் பள்ளி வாகனங்கள் ஆய்வு

கோபி, மே 16-கோபி மற்றும் பவானி வட்டாரத்துக்குட்பட்ட தனியார் பள்ளி வாகனங்கள் வியாழனன்று ஆய்வு செய்யப்பட்டது. கோபி மற்றும் பவானி பகுதிகளில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளிகளின் 250க்கும் மேற்பட்ட வாகனங்கள் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் பழனிவேலு தலைமையில் ஒத்தக்குதிரையில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் ஆய்வு செய்யப்பட்டது. அரசு அறிவித்துள்ள 18 விதிமுறைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதா என்று, கோட்டாட்சியர் அசோகன், வாகன ஆய்வாளர்கள் பிரதிபா, மாலதி, சத்யா ஆகியோர் முன்னிலையில் ஆய்வுநடைபெற்றது. ஆய்வில் முறையான ஆவணங்கள் இல்லாத வாகனங்களையும், அரசு விதிமுறைகளின்அடிப்படையில் செயல்படுத்தாத சுமார் 15 வாகனங்களையும் திருப்பி அனுப்பி பள்ளி நிர்வாகத்திற்கு எச்சரிக்கைக் கடிதம் அளிக்கப்பட்டது. ஆய்வின்போது பள்ளி வாகன ஓட்டுநர்களுக்கு இலவச கண் பரிசோதனையும் செய்யப்பட்டது. மேலும் வாகன ஓட்டிகளுக்கு குழந்தைகளை அழைத்துச் செல்லும் போது கடைபிடிக்க வேண்டிய விதி முறைகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. இந்நிகழ்வுகளில் கோபிஉட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் கிருஷ்ணசாமி, வட்டாட்சியர் விஜயகுமார், தனியார் பள்ளி மேலாளர்கள், வாகன ஓட்டிகள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.