tamilnadu

வ.உ.சி பூங்காவில்  புதிய உடற்பயிற்சி உபகரணங்கள்

ஈரோடு, மார்ச் 8- ஈரோடு வ.உ.சி பூங்கா நடைபயிற்சி மைதானத் தில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக புதிய உடற் பயிற்சி உபகரணங்கள் சனியன்று நிறுவப்பட்டது. ஈரோடு மாவட்டம், வ.உ.சி மைதானத்தில் பொதுமக்கள் உடற்பயிற்சி செய்யவும், நடைபயிற்சி  மேற்கொள்ளவும் மைதானம் அமைக்கப்பட்டுள் ளது. இம்மைதானத்தில் பொதுமக்களுக்காக நடை மேடை, நடைதளம், உடற்பயிற்சி உபகரணங்கள் வைக்கப்பட்டு  உபயோகத்தில் உள்ளது. இதை நலம் நாடும் சங்கத்தினர் பராமரித்து வருகின்றனர். இந்நிலையில், கூடுதலாக உடற்பயிற்சி உபகர ணங்கள் தேவைப்படுவதாக நலம் நாடு சங்கத்தினர் கோரிக்கை வைத்திருந்தனர். இதனடிப்படையில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.தென்னரசு மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 8 லட்சம் மதிப்பில் உடற்பயிற்சி உபகரணங்கள் நிறுவப்பட் டது.