tamilnadu

அத்துமீறும் மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்கள்: நடவடிக்கை கோரி மகளிர் சுயஉதவி பெண்கள் மனு

கோபி, ஜூன் 30- இந்திய ரிசர்வ் வங்கி உத்தரவினை மீறி கொரோனா பொது முடக்க காலத் தில் மைக்ரோ பைனான்ஸ் நிதி நிறு வனங்கள் கட்டாய கடன் தவனை யைத் தொகையை வசூலிப்பதை கண் டித்தும், அத்துமீறி நடந்து கொள்ளும் மைக்ரோபைனான்ஸ் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியு றுத்தியும் கோபிசெட்டிபாளையம் கோட்டாட்சியரிடம் மகளிர் சுய உதவிக்குழு பெண்கள் 100க்கும் மேற் பட்டவர்கள் மனு அளித்தனர். இதுகுறித்து அம்மனுவில் தெரி வித்திருப்பதாவது, கொரோனாவால் ஏற்பட்ட பொதுமுடக்கத்தால் வேலை யின்றி வருமானம் இழந்து வாழ்க் கையை நடத்தவே மிகவும் சிரமப் பட்டு வருகிறோம்.

இந்த பொது முடக் கத்தால், ரிசர்வ் பேங்க் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண நடவடிக்கை யில் அனைத்து வகையான கடன் தவ ணைத் தொகையை செலுத்துவதற்கு மார்ச் முதல் ஆகஸ்ட் வரை கால அவ காசம் அளித்து உத்தரவிட்டது. ஆனால் மைக்ரோபைனான்ஸ் நிதி நிறுவனஅதிகாரிகள் கடன் தவணை தொகையை உடனடியாகச் செலுத்து மாறும், தவணை தவறிய தொகைக்கு அபராத வட்டி செலுத்துமாறும், பெண் களை கட்டாயப்படுத்தி மிரட்டி வரு கின்றனர்.

இதனால் கடன் பெற்ற வர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகி வருகின்றனர். எனவே, கடன் மற்றும் தவணை தவறிய மார்ச் முதல் ஆகஸ்ட் வரையிலான ஆறு மாதங்களுக்கு அபராத வட்டி வசூலிப் பது தடுத்து நிறுத்த வேண்டும். அதனை பின்பற்றாமல் நடந்துகொள்ளும் ஊழி யர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண் டும் என தெரிவித்திருந்தனர்.

;