tamilnadu

img

அத்திக்கடவு – அவிநாசி திட்ட முதல் நீரேற்று நிலையம் காளிங்கராயன் அணைக்கட்டில் அமைச்சர்கள் ஆய்வு

ஈரோடு,ஜன.20- அத்திக்கடவு – அவினாசி திட்ட முதல் நீரேற்று நிலையம் அமைப்பதற் கான பணிகளை தமிழக அமைச்சர்கள் ஆய்வு செய்தனர். ஈரோடு மாவட்டம், காளிங்கரா யன்பாளையத்தில் அத்திக்கடவு –அவிநாசி திட்டத்தில் அமைக்கப் பட உள்ள முதல் நீரேற்று நிலை யத்துக்கான இடத்தை திங்களன்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங் கோட்டையன்,  சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பணன் ஆகியோர் ஆய்வு செய்தனர். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர்கள் கூறுகையில், கடந்த ஆண்டு 2019 பிப். 28 ஆம் தேதியன்று ரூ 1,652 கோடியில் அத்திக்கடவு – அவிநாசி திட்டத்துக்கு தமிழக முதல்வர் அடிக் கல் நாட்டினார். ஈரோடு, திருப்பூர், கோவை மாவட்டங்களில் உள்ள ஏரி, குளங்களை நிரப்பும் வகையில், இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.  இத்திட்டத்தின் நோக்கம், பவானி ஆற்றின் உபரி நீரின் ஒரு பகுதியை கொண்டு, நிலத்தடி நீர் மட்டம் உயர்த் துதல், செறிவூட்டல், பாசன பயன்பாட் டுக்கு வழங்குதலாகும். பவானி ஆற்று நீர்  கடைசி அணைக்கட்டான காளிங்கராயன் அணைக்கட்டை அடைகிறது. பின், உபரி நீர் காவிரி யில் விடப்படுகிறது. இந்த உபரி நீரான 1.5 டி.எம்.சி தண்ணீரை ஈரோடு,  திருப்பூர், கோவை மாவட்டங்களில் வறட்சியான பகுதியில் உள்ள, 1,044 குளங்கள், குட்டை, ஏரியை நிரப்ப திட்டமிடப்பட்டுள்ளது.  மேலும் காளிங்கராயன் அணைக் கட்டில் இருந்து வெளியேறும் உபரி  நீர் மின் உற்பத்திக்கும் பயன்ப டுத்தப்படும். இவ்வாறு அமைச்சர்கள் தெரிவித்தனர். 

;