tamilnadu

img

கோபி: தனியார் நூற்பாலை தொழிலாளர்களுக்கு மருத்துவ பரிசோதனை

கோபி, மார்ச் 23- கோபிசெட்டிபாளையம் அருகே  உள்ள ஒத்தக்குதிரையில் செயல்படும் தனியார் நூற்பாலையில் பணியாற் றிய இரு வெளிமாநில தொழிலாளர்க ளுக்கு காய்ச்சல், இருமல் இருந்ததால் அவர்களை சுகாதாரத் துறையினர் மருத்துவமனைக்கு அழைத்துச்  சென்று பரிசோதனை செய்து வருகின் றனர். ஈரோடு மாவட்டம், கோபிசெட்டி பாளையம் அருகே உள்ள ஒத்தக்குதி ரையில் செயல்பட்டு வரும் தனியார் நூற்பாலையில் சுமார் 500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணி யாற்றி வருகின்றனர். இதில், 203 பேர் வெளி மாநில தொழிலாளர்கள் ஆவர். இவர்களில் அசாம் மற்றும் ஒரிசாவிலி ருந்து வந்திருந்த இருவருக்கு காய்ச் சல், இருமல் இருந்ததால் கூகலூரில் செயல்படும் அரசு ஆரம்ப சுகாதார  நிலையத்திற்கு சிகிச்சைக்காக ஞாயி றன்று அழைத்து சென்றனர். அங்கு  பரிசோதனை செய்த மருத்துவர் கொரோனா அறிகுறியின் சந்தேகத் தின் அடிப்படையில் சுகாதாரத்துறை யினருக்கு தகவல் தெரிவித்து, இந்த இரு வெளி மாநில தொழிலாளர்களை பெருந்துறையில் செயல்படும் ஐ.ஆர். டி.டி மருத்துவக்கல்லூரி மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்றனர். இந்நிலையில் அவர்களுடன் பணி யாற்றி வந்த மற்ற தொழிலாளர்க ளுக்குக் காய்ச்சல், இருமல் உள்ளதா  என்பதை அறிய கோபிசெட்டிபாளை யம் கோட்டாட்சியர் ஜெயராமன் உத்தரவின்பேரில், வட்டாட்சியர் சிவசங்கர் மற்றும் வட்டார மருத்துவ  அலுவலர் செந்தில்குமார் தலைமை யிலான மருத்துவக்குழுவினர் தனி யார் நூற்பாலைக்குச் சென்று பரி சோதனை செய்தனர். மேலும், நூற் பாலையில் உட்புறகட்டமைப்பு, சுகா தாரம் உள்ளிட்டவற்றை ஆய்வு மேற் கொண்ட கோட்டாட்சியர், நூற்பாலை யில் கிருமிநாசினி தெளிக்கப்படாமல் இருப்பதையும், தொழிலாளர்களை கைகழுவ வைத்து சுத்தம் செய்யாமல் பணியில் அமர்த்தியது குறித்தும் விளக்கம் கேட்டார். மேலும் அனைத்து தொழிலாளர்களுக்கும் முகக்கவசம் அணிவிக்க வேண்டும் என்றும் அறி வுறுத்தினார்.