tamilnadu

img

சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் தீவிரம் குழந்தைகளை பாதுகாப்பாக பார்த்துக் கொள்ள அறிவுரை

கோபி, பிப். 4-     கோபிசெட்டிபாளையம் அருகே  உள்ள பெரியகொடிவேரி தாசப்பகவுண் டன்புதூர் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த நான்கு நாட்களாக கால்நடைகளை வேட் டையாடி வரும் சிறுத்தையை பிடிக்க தூக்க நாயக்கன்பாளையம் வனத்துறையினர் தானியங்கி கேமராக்கள் பொருத்தியும், கூண்டு வைத்தும் தொடர்கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். ஈரோடு மாவட்டம், அந்தியூர் அருகே  உள்ள பெரியகொடிவேரி, தாசப்பகவுண் டன்புதூர், கொங்கர்பாளையம் உள்ளிட் டப் பகுதிகளில் கடந்த நான்கு நாட்களாக விவசாயத் தோட்டங்களில் புகுந்த சிறுத்தை  ஒன்று ஆடு, கன்றுக்குட்டி உள்ளிட்ட கால்நடைகளை வேட்டையாடி வருகிறது. இதனால் அப்பகுதி விவசாயிகள் மற்றும்  பொதுமக்கள் பெரும் அச்சமடைந்த னர். இந்நிலையில் சிறுத்தையை பிடிக்க  வேண்டும் என்ற அப்பகுதி மக்க ளின் கோரிக் கையை ஏற்ற தூக்கநாயக்கன்பாளையம் வனத்துறையினர் தானியங்கி கேமராக் களை பொருத்தியும், தாச்சப்பகவுண்டன் புதூர் மற்றும் கொங்கர்பாளையம், கொலிஞ்சிக்காடு ஆகிய பகுதிகளில் கூண்டு வைத்தும் வனத்துறை அலுவலர்கள் மற்றும் வேட்டைத்தடுப்புக் காவலர்கள் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்ற னர்.  இந்நிலையில் சிறுத்தையை கரும்பு தோட்டம் மற்றும் வாழைத்தோட்டங்களில் நேரில் பார்த்ததாக விவசாயிகள் தெரி வித்து வருகின்றனர். இதனால் மாலை ஆறு மணிக்கு மேல் விவசாயத் தோட்டங்க ளில் உள்ளவர்கள் அதிகம் வெளியில் நடமாடவேண்டாம் என்றும், விவசாயத் தோட்டங்களில் குடியிருக்கும் பொது மக்கள் மாலை நேரங்களில் குழந்தைகளை வெளியில் விளையாட விட வேண்டாம் என்றும், குழந்தைகளை பெற்றோர்களின் பார்வையில் படும் படி கண்காணிக்க வேண்டும் என்றும், பகல் நேரங்களில் விவசாய பணியில் ஈடுபடும் விவசாயிகள் மற்றும் விவசாயக் கூலித்தொழிலாளர்கள் இரண்டுக்கும் மேற்பட்டவர்களுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்றும் வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.