tamilnadu

img

கொடிவேரி தடுப்பணையில் குளிக்க தடை நீக்கம் இரு மாணவர்கள் நீரில் மூழ்கி பலி - மீண்டும் தற்காலிகத் தடை

கோபி, நவ. 24 - ஈரோடு மாவட்டம், கொடிவேரி தடுப்பணையில் குளிக்கவும், பரி சல் இயக்கவும் விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டுள்ள நிலையில் இரு  மாணவர்கள் நீரில் மூழ்கி பலியாகி னர்.  ஈரோடு மாவட்டம், கோபி செட்டிபாளையம் அருகே உள்ள கொடிவேரி தடுப்பணை பிரபல மான சுற்றுலாத் தளமாகும். இங் குள்ள அருவிக்கு வரும் சுற்றுலா வாசிகள் குளிப்பதும், பரிசலில் பயணித்தும் மகிழ்வர். வார விடு முறை நாட்கள், பண்டிகை நாட்க ளில் சேலம், ஈரோடு, நாமக்கல், கோவை மற்றும் திருப்பூர் உள் ளிட்ட மாவட்டங்களில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வருகை அதி கமாக இருக்கும். இந்நிலையில், வடகிழக்கு பருவ  மழையால் பவானிசாகர் அணை  முழு கொள்ளளவான 105 அடியை எட்டியது. இதனால் அணையிலி ருந்து உபரிநீர் பவானி ஆற்றில் அதிகளவு திறக்கப்பட்டது. இதன் காரணமாக கொடிவேரி தடுப் பணை அருவிப்பகுதியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து தடுப்பணை அருவிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டது. தற்போது மழை பொழிவு குறைந்து பவானிசாகர் அணைக்கு நீர்வரத்தும் குறைந்துள்ளது. அணையிலிருந்து வெளியேறும் உபரிநீர் நிறுத்தப்பட்டுள்ளது. இத னால் ஞாயிறு முதல் தடுப்பணை அருவியில் குளிக்கவும், பரிசல் பயணம் மேற்கொள்ளவும் சுற்றுலா பயணிகளுக்கு விதிக்கப்பட்டி ருந்த தடையை பொதுப்பணித் துறையினர் நீக்கினர். கடத்தூர், பங்களாபுதூர் ஆகிய காவல் துறை யினர்  அருவியின் இருபுறங்களிலும் கண்காணிக்கப்பு பணியில் ஈடு படுத்தப்பட்டுள்ளனர். வரும் நாட் களில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிக்கும் என பொதுப் பணித்துறையினர் தெரிவித்தனர்.   மாணவர்கள் நீரில் மூழ்கி பலி உதகை மாவட்டம், குன்னூர் வண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்த நான்கு குடும்பத்தினர் குழந்தைகளுடன் கொடிவேரி அணைக்குசுற்றுலா வந்துள்ள னர். கொடிவேரி தடுப்பணை அரு வியில் குளித்து போது மணல் போக்கி உள்ள இடத்தின் அருகில் சென்றபோது 10ம் வகுப்பு மாண வர் சுதீஸ் எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கத் தொடங்கியுள்ளார். இதையடுத்து அவரது உறவினரான இரண்டாம் ஆண்டு கல்லூரி மாண வர் விக்னேஷ் எனபவர்`காப் பாற்ற சென்றபோது இருவரும் நீரில் மூழ்கினர். இதனைப் பார்த்த உறவினர்கள் கூச்சலிட்டனர்.  இதுகுறித்து சத்தியமங்கலம் தீய ணைப்புத்துறையினருக்கும், பங்களாபுதூர் காவல்துறையின ருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த சத்தியமங்கலம் தீயணைப் புத்துறையினர் இரண்டு மணி நேர தேடலுக்கு பிறகு சுதீஸ், விக் னேசையும் சடலமாக மீட்டனர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்த பங் களாபுதூர் காவல்துறையினர் இரு மாணவர்கள் உயிரிழப்பு குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையே மாணவர்கள் நீரில் மூழ்கி பலியான சம்பவம் சுற்றுலாப் பயணிகளிடம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. கொடிவேரி அணைப்பகுதியில் பல்வேறு எச்சரிக்கை அறிவிப்பு பலகைகள் வைத்துள்ள போதும் அதையொல்லாம் மீறும் சுற்றுலாப் பயணிகள் ஆபத்தான பகுதிக்கு சென்று குளிப்பதே உயிரிழப்புக்கு காரணம் என பொதுப்பணித்துறை யினர் மற்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து கொடிவேரி தடுப்பணை அருவியில் சுற்றுலாப்பயணிகள் குளிக்க தற்காலிக தடைவிதிக்கப் பட்டுள்ளது.

;