குடிநீர் இணைப்புக்காக வைப்புத் தொகையை பலமடங்கு உயர்த்தி கட்டாயமாக வசூலிப் பதை கண்டித்தும், பொது குழாய்களை அகற்றக்கூடாது என வலியுறுத்தியும் சத்திய மங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சத்தி தாலுகா செயலாளர் எம்.விஜயகுமார் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்டக்குழு உறுப்பினர் இரா.திருத்தணிகாசலம், பி.வாசு தேவன், ஜே.மைக்கேல்ராஜ், ஆர்.சத்தியமூர்த்தி உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு வட்டார வளர்ச்சி அலுவலரிடம் மனு அளித்தனர்.