tamilnadu

img

ஈரோட்டில் விடியல் ஐக்கான்ஸ் விருது வழங்கும் விழா

ஈரோடு, பிப்.6- புன்செய் புளியம்பட்டி விடியல் சமூக நல அறக்கட்டளை மற்றும் கோவை ஆதித்யா கல்வி நிறுவனங்கள் சார்பில் பல்வேறு துறைகளில் சாதித்த மாணவ மாணவியர்களுக்கும், பள்ளிகளுக்கும் புதனன்று விடியல் ஐக்கான்ஸ் விருது வழங்கப்பட்டது.  ஈரோடு மாவட்டம், புன்செய் புளியம் பட்டி விடியல் சமூகநல அறக்கட்டளை  மற்றும் கோவை ஆதித்யா கல்வி  நிறுவனங்கள் சார்பில் ஆண்டுதோறும்  சாதனை புரிந்த மாணவ மாணவியர்க ளுக்கு விருது வழங்கப்படுகிறது. இந்த  ஆண்டுக்கான விருது வழங்கும் விழா  நகராட்சி திருமண மண்டபத்தில் நடை பெற்றது. விடியல் அறக்கட்டளை செய லாளர் எஸ்.ஜெயகாந்தன் வரவேற்றார்.  ஆதித்யா தொழில்நுட்ப கல்லூரி தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் சித்ரா  மனோகர் தலைமை தாங்கனார்.  அண்ணா பல்கலைக் கழகத்தின் முன் னாள் துணை வேந்தர் பேராசிரியர் பால குருசாமி மற்றும் பாரதியார் பல்கலைக் கழகத்தின் அண்ணா ஐஏஎஸ் பயிற்சி  மையத்தின் இயக்குனர் பத்மநாபன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு விருதுகளை வழங்கி னார்கள்.  இதில் தேசிய நல்லாசிரியர் விருது  பெற்றகோபி, வைரவிழா பள்ளி  ஆசிரியர் மன்சூர் அலி, குரூப் 2  தேர்வில் மாநிலத்தில் முதிலிடம் பிடித்த அவிநாசி மாணவி சுபாஷினி,  முதல்வர் கோப்பை ஹாக்கி போட்டி யில் தொடர்ந்து முதலிடம் பெற்று வரும்  கெ.ஓ.ம அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகள், சிறந்த தூய்மை  பள்ளிக்கான மத்திய அரசின் விருது  பெற்ற பனையம்பள்ளி அரசுமேல்நி லைப்பள்ளி, சிறந்த தூய்மை பள்ளிக் கான மாநில அரசின் விருது பெற்ற  தொட்டம்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளி, அன்னூர் மாணவன் ஹரிஷ் போன்ற மாணவர்கள் மற்றும் பள்ளி களுக்கு விடியல் ஐக்கான்ஸ் விருது  வழங்கப்பட்டது.  இந்நிகழ்ச்சியில் விடியல் அறக் கட்டளை தலைவர் வாணி தருமராசு,  புன்செய் புளியம்பட்டி கெ.ஓ.ம அரசு  பெண்கள் மேல்நிலைபள்ளி தலைமை ஆசிரியை உமா கௌரி, கே.வி.கே அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் தேவராஜன் மற்றும்  ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள்,  ஆதித்யா கல்லூரி பேராசிரியர்கள், உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.

;