tamilnadu

img

ஆபத்தான பரிசல் பயணம் அம்மாபாளையத்தில் தடுப்பணை கட்டித்தர கோரிக்கை

கோபி, அக். 12- கோபிசெட்டிபாளையம் அருகில் உள்ள அம்மாபாளையம் ஊராட்சிக்குட்பட்ட கிராம மக் கள் பவானி ஆற்றைக் கடக்க ஆபத்தான பரிசல் பயணம் மேற் கொண்டு வரும் நிலையில், தடுப் பணை கட்டித்தர வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். ஈரோடு மாவட்டம், கோபி செட்டிபாளையம் அருகே உள்ள அம்மாபாளையம், ராக்கிணாம் பாளையம், கணேசன்புதூர் ஆகிய கிராமங்களை உள்ளடக் கியது அம்மாபாளையம் ஊராட்சி உள்ளது. இக்கிராமத்தில்  500க்கும் மேற்பட்ட குடுபங்க ளில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின் றனர். இக்கிராமத்திற்கு போதிய சாலை வசதியில்லாததால் பேருந்து போக்குவரத்து முற்றி லும் இல்லை. இதனால், இக் கிராம மக்கள் பவானி ஆற்றைக் கடந்து அக்கரையில் உள்ள அந்தியூர் - சத்தியமங்கலம் சாலையை அடைந்து அங்கிருந்து மற்ற ஊர்களுக்கு செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது. இல்லையென்றால் ஐந்து கிலோ மீட்டருக்கும் மேல் நடந்து சென்று மேவானி என்ற ஊரில் பேருந்து பிடிக்க வேண்டும். அதனால் பவானி ஆற்றைக் கடக்க பல தலைமுறைகளாக பரிசல் மட்டுமே பயன்படுத்தி வரு கின்றனர். இவ்வாறு தனித்து விடப்பட்ட தீவு போல் காட்சியளிக்கும் அம் மாபாளையத்திலிருந்து தினமும்  பள்ளி மற்றும் கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள், வேலைக்கு  செல்லும் பொதுமக்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஆபத்தான முறையில் பரிசல் பயணித்தை மேற்கொண்டு  வருகின்றனர். மேலும், விவசாயி கள் தாங்கள் விளைவித்த விளை பொருட்களை விற்பனை செய்ய எடுத்துச்செல்ல முடியாமல் உள் ளுர்களுக்கு வரும் இடைத்தரகர் களிடம் விற்பதால் நட்டம் ஏற் படுவதாகவும் வேதனை தெரி விக்கின்றனர். மேலும், பவானி ஆற்றில் வெள்ளம் வரும் காலங்களில் ஆற்றைக் கடக்க முடியாமல் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவி கள் மற்றும் பொதுமக்கள் ஒரு வாரகாலத்திற்கு கூட வெளியில் செல்ல முடியாமல் தவிக்கின்றனர். இதனால் குழந்தைகளின் கல்வி கேள்விக் குறியாவதுடன் அவர்க ளில் எதிர்காலமும் வீணாகிறது. மேலும், இப்பகுதி மக்கள் கடந்த காலங்களில் பிரசவத்திற்காக மருத்துவமனை செல்ல ஆற்றைக் கடக்க முயன்ற நிறைமாத கர்ப் பிணி பெண்கள், நோய்வாய்ப் பட்ட முதியவர்கள் என 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள தாகவும் அப்பகுதியினர் தெரிவிக் கின்றனர். ஆகவே, இப்பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில் பவானி ஆற்றைக் கடக்க பாலம் கட்டித் தர வேண்டும் என்று பல ஆண்டு களாக இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து போராடி வருகின்றனர். இதுதொடர்பாக தமிழக அரசுக்கும், மாவட்ட நிர்வா கத்திற்கும் பலமுறை மனு அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளா மல் தமிழக அரசு மௌனம் காத்து வருவதாகவும் அப்பகுதியினர் தெரிவிக்கின்றனர். இச்சூழலில் தற்போது பவானி ஆற்றின் குறுக்கே இரண்டு தடுப்பணைக்கள் கட்டப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில் அதில் ஒன்றை அம்மா பாளையம் கிராமத்தில் அமைத்து அதில் போக்குவரத்துக்கு வழி வகை செய்ய வேண்டும் என அப் பகுதி மக்கள் கோரிக்கை வைத் துள்ளனர்.