சத்தியமங்கலம், செப். 20- ஆசனூர் மலைப்பகுதியில் மக்காச்சோளத்தில் ஊடுபயி ராக கஞ்சா செடி பயிரிட்டவர் கைது செய்யப்பட்டார். ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தை அடுத்துள்ள ஆச னூர் மலைப்பகுதியில் கேர்மாளம் அருகே மக்காச்சோளம் பயிரிட்டுள்ள விளை நிலத்தில் ஊடுபயிராக கஞ்சா செடிகள் பயிரிட்டிருப்பதாக ஆசனூர் காவல் துறையினருக்கு ரக சிய தகவல் கிடைத்தது. இதையடுத்து ஆசனூர் காவல் துறை யினர் கேர்மாளம் அடுத்துள்ள ஒரத்தி மலைக் கிராமத்தில் ரோந்து பணி மேற்கொண்டபோது அப்பகுதியில் உள்ள குருசாமி (40) என்பவரது விவசாய நிலத்தில் பயிரிடப் பட்டுள்ள மக்காச்சோள பயிருக்கு இடையே ஊடுபயிராக கஞ்சா செடிகள் வளர்ந்து இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து அவரிடமிருந்து 3.5 கிலோ கஞ்சா செடிகளை பறிமுதல் செய்த காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து குருசாமியை சிறையில் அடைத்தனர்.