கோபி, மே 10- ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிப்பாளையம் நல்ல கவுண்டம்பாளையத்தைச் சேர்ந்தவர் பிரசாந்த். இவர் நாகர் பாளையம் சாலையில் சென்றபோது சாலையோரம் அழுத நிலையில் ஒரு பச்சிளம் குழந்தையை கண்டுள்ளார். இதனை தொடர்ந்து அப்பகுதி பொதுமக்கள் ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு தகவல் அனுப்பி வைத்தனர். இக் குழந்தை தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற் கொண்டு வருகின்றனர். பிறந்து மூன்று நாட்களே ஆன குழந்தை வீதியில் கிடந்தது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.