tamilnadu

கீழ்பவானி பாசன கால்வாய்க்கு உடனடியாக தண்ணீர் திறக்க ஏற்பாடு செய்திடுக - விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்

ஈரோடு, ஆக. 9- பவானிசாகர் அணையிலிருந்து, கீழ்பவானி பாசன கால்வாய்க்கு உடனடியாக தண்ணீர் திறக்க தமிழ் நாடு விவசாயிகள் சங்கம் வலியு றுத்தியுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு விவசாயி கள் சங்கத்தின் ஈரோடு மாவட்ட செயலாளர் ஏ.எம்.முனுசாமி வெளி யிட்டுள்ள அறிக்கையில் தெரிவித் துள்ளதாவது, தென்மேற்குப் பருவ மழை தீவிரமடைந்துள்ள நிலையில் பவானிசாகர் அணை நீர்பிடிப்புப் பகுதி மற்றும் நீலகிரி மலைப் பகுதி களில் கனமழை பெய்து வருவதால் பவானிசாகர் அணையின் நீர்மட் டம் வெகுவாக உயர்ந்துள்ளது. வழக்கமாக ஆகஸ்ட் 15 ஆம் தேதி கீழ்பவானி பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படும். அதனடிப்படையில் தமிழக முதல்வர் தண்ணீர் திறக்க அறிவித்துள்ளார். ஆனால், அணை யின் நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டியுள்ள நிலையில் முன்கூட் டியே தண்ணீர் திறக்க ஏற்பாடு செய் தால் கீழ்பவானி பாசன பகுதியில் ஒரு லட்சம் ஏக்கர் சாகுபடிக்கு நீர் கிடைக்கும். இந்நிலையில், வழக்க மாக தண்ணீர் திறந்தால் கடை கோடிக்கு தண்ணீர் போய்சேர ஒருவார காலம் ஆகும். ஆகவே, தமிழக முதல்வர் உடனடியாக ஆக.15 ஆம் தேதிக்கு முன்பா கவே பவானி அணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீரை திறக்க உத்தரவிட வேண்டும்.  மேலும், விவசாயிகளுக்குத் தேவையான நெல் விதைகளும் தட் டுப்பாடில்லாமல் மானிய விலை யில் வழங்க அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தமிழ் நாடு விவசாயிகள் சங்கம் கேட்டுக் கொள்வதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

;