tamilnadu

img

ஈரான் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்

சவுதி அருகே, ஈரான் நாட்டுக்கு சொந்தமான எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டதாக அந்நாட்டின் அரசு தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.

ஈரான் நாட்டுக்கு சொந்தமான எண்ணெய் கப்பல் சவுதி அரேபியாவின் ஜெட்டா துறைமுகம் அருகே சென்று கொண்டிருந்தபோது, இரு ஏவுகணைகள் எண்ணெய் கப்பலை தாக்கியது. இதை அடுத்து எண்ணெய் கப்பல் நடுக்கடலில் தீப்பிடித்து எரிந்தது. மேலும், கப்பலில் இருந்து ஏராளமான கச்சா எண்ணெய் கடலில் கொட்டப்பட்டதாக ஈரான் நாட்டின் அரசு தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த தாக்குதலை ’தீவிரவாத தாக்குதல்’ என்று ஈரானின் ஐ.எஸ்.என்.ஏ தெரிவித்துள்ளது. இந்நிலையில், ஈரான் மற்றும் சவுதி இடையே பதற்றம் நிலவி வருகிறது. இதுகுறித்து சவுதி தரப்பில், எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. இந்த சூழலில், சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை 2 சதவீதம் அதிகரித்துள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது.

;