tamilnadu

img

பாகிஸ்தானில் ஏப்ரல் 30 வரை ஊரடங்கு...

இஸ்லாமாபாத்
இந்தியாவின் மேற்கு எல்லையில் உள்ள நாடான பாகிஸ்தானில் கொரோனோ வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது. அங்கு இதுவரை 5,988 பேர் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 107 பேர் பலியாகியுள்ள நிலையில், கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 151 பேர் புதிதாக கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

கொரோனா தடுப்பில் பாகிஸ்தான் அரசு மந்தமாகச் செயல்படுவதாக அந்நாட்டு மக்கள் சமூக வலைத்தளங்களில் கோரிக்கை எழுப்ப, நேற்று பாகிஸ்தான் அரசு  மாகாண முதலமைச்சர்கள் கூட்டம் நடத்தியது. இந்த கூட்டத்தின் முடிவில் ஏப்ரல் 30-ஆம் தேதி வரை ஊரடங்கு கடைப்பிடிக்கப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

பாகிஸ்தான் அரசு ஏற்கெனவே ஊரடங்கு அறிவித்திருந்தாலும் கொரோனா அதிகம் பாதித்திருந்த பகுதியில் மட்டும் ஊரடங்கு கடைப்பிடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
 

;