tamilnadu

img

கோத்தபய ராஜபக்சே மீதான ஊழல் வழக்குகளை தள்ளுபடி செய்தது இலங்கை நீதிமன்றம்

இலங்கை ஜனாதிபதி கோத்தபய ராஜபக்சே மீதான ஊழல் வழக்குகள் அனைத்தையும் அந்நாட்டு நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

இலங்கையில் நடந்த ஜனாதிபதி தேர்தலில், பொது ஜன பெரமுனா கட்சியின் சார்பில் போட்டியிட்ட கோத்தபய ராஜபக்சே வெற்றி பெற்று, கடந்த திங்கள் அன்று ஜனாதிபதியாக பதவியேற்றார். கோத்தபாய ராஜபக்சேவின் தந்தையான டி.ஏ. ராஜபக்சேவுக்கு அருங்காட்சியகம் அமைக்க அப்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்சே காலத்தில் முடிவு செய்யப்பட்டு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த நிதி ஒதுக்கீட்டில் மோசடி நடைபெற்றதாக இலங்கை நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் சிக்கிய கோத்தபய ராஜபக்சே உள்பட 7 பேரின் பாஸ்போர்ட்கள் முடக்கப்பட்டன. தற்போது ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள நிலையில், கோத்தபய ராஜபக்சே மீதான 33.9 மில்லியன் ரூபாய் மோசடி வழக்குகள் அனைத்தையும் இலங்கை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து அவர் வெளிநாடுகளுக்கு செல்வதற்கு விதிக்கப்பட்டிருந்த  தடையையும் நீக்கி இன்று உத்தரவிட்டது. 

;