tamilnadu

img

எழுத்தாளர் யு.ஆர்.அனந்தமூர்த்தி

கன்னட எழுத்தாளரும் இலக்கிய வாதியும் ஆவார். கன்னட இலக்கியத் துறையின் வளர்ச்சிக்கு முக்கியப் பங் காற்றியவர். இந்திய அளவில் முன்னணி எழுத்தாளர்களில் ஒருவர். 1994 இல் இந்திய அளவில் இலக்கியத் துறைக்கு வழங்கப்படும் உயரிய விருதான ஞானபீட விருதைப் பெற்றவர். இந்த விருது இதுவரையிலும் எட்டு கன்னட எழுத்தாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. 1998 ஆம் ஆண்டு இந்திய அரசு இவருக்கு பத்ம பூசன் விருது வழங்கிச் சிறப்பித்தது. இந்தியாவில் சாதி முறைகளை, வர்ணாஸ்ரமத்தை கடுமையாக எதிர்த்தவர்.

அவருடைய சம்ஸ்காரா, அவஸ்தை உள்ளிட்ட சில புதினங்கள் தமிழில் வெளிவந்துள்ளன. 1993இல் சாகித்ய அகாதமியின் தலை வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு சிறப்பாகச் செயல்பட்டார். இவர் 2014ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலின்போது இந்தியாவின் பிரதமராக மோடி வந்தால் நாட்டைவிட்டுச் சென்று விடுவேன் என்று கருத்துக்கூறியதால் இந்துத்துவா வெறியர்கள் பல இன்னல்களுக்கு உள்ளானார்.

-பெரணமல்லூர் சேகரன்