tamilnadu

img

நகைக்கடன் மீண்டும் எப்போது?

சென்னை,ஜூலை 14- கூட்டுறவு வங்கிகளில் நகைக் கடன் நிறுத்தலுக்குரிய காரணங்களை விளக்கியும் நகைக்கடன் வியாபாரம் எப்போது தொடங்கும் என்பது குறித்த அறிவிப்பை மக்களுக்கு தெரி விக்கும்படி கூட்டுறவு வங்கி ஊழியர் சம்மேளனம் கேட்டுக்கொண்டுள்ளது. இதுகுறித்து கூட்டுறவு வங்கி ஊழியர் சம்மேளனம் (தமிழ்நாடு) மாநிலத் தலைவர் தி.தமிழரசு, பொதுச் செயலாளர் இ.சர்வேசன் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 

தமிழ்நாடு மாநில கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அலுவலகத்தி லிருந்து கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் (சட்டம் மற்றும்  பயிற்சி) அவர்கள் ஒரு குறுஞ்செய்தி யை அனைத்து மாவட்ட மண்டல இணைப் பதிவாளர்களுக்கு அனுப்பி யுள்ளார். அதில் தமிழகத்திலுள்ள மாநில தலைமைக் கூட்டுறவு வங்கி, 23  மத்திய கூட்டுறவு வங்கிகள், 128 நகர கூட்டுறவு வங்கிகள், 4250 தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் உள்ளிட்டு அனைத்து நிறுவனங்களிலும் நகைக் கடன் வழங்க நிறுத்தி வைக்க ஆணையிடப்பட்டுள்ளன. 

உலகம் முழுவதும் கொரோனா நோய்த் தொற்று பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்திலும் அதன் பாதிப்பு அதிகமாக உள்ளது. மக்கள்  வேலையின்றி, வருமானம் இழந்துள்ள னர். இந்த நிலையில் வீட்டிலிருக்கும் நகைகளைக் கொண்டு நகைக் கடன் பெற்று தங்களின் வாழ்வாதாரத்தை பாதுகாத்துக் கொள்ள மக்கள் முயன்று வருகின்றனர். இந்தக் காலகட்டத்தில் காரணமும் தெரிவிக்காமல், மீண்டும் நகைக்கடன் எப்போதிலிருந்து வழங்கப் படும் என்பது கூறாமல் இருப்பது ஊழி யர்களுக்கும் வாடிக்கையாளர்களு க்கும் அதிர்ச்சிகரமாக உள்ளது.  இந்த தகவலினால் கிளைகளில் வாடிக்கையாளர்களுக்கு தகுந்த பதிலையோ அல்லது அவர்கள் எப்போது வந்து நகைக்கடன் பெற்றுக் கொள்ளலாம் என்ற பதிலையோ கூற முடியாத நிலை ஊழியர்களுக்கு ஏற் பட்டுள்ளது. சில இடங்களில் வாடிக்கை யாளர்களின் கோபத்தை வங்கி ஊழி யர்கள் எதிர்கொள்ள வேண்டியுள்ளது.  எனவே, வாடிக்கையாளர் மற்றும் வங்கியாளர் நல்லுறவை மேம்படுத்தும் வகையில் நகைக் கடன் நிறுத்தலு க்குரிய காரணங்களை விளக்கியும் மற்றும் நகைக்கடன் வியாபாரம் எப்போதிலிருந்து தொடங்கும் என்ற தகவலை தெரிவிக்க வேண்டும்.

;