சிதம்பரம், மார்ச்.5- சிதம்பரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சார்பில் அரசியல் விளக்க பொதுக் கூட்டம் நடைபெற் றது. நகரச் செயலாளர் ராஜா தலைமை வகித்தார். மாவட்டக்குழு உறுப்பினர் முத்து வரவேற்றார். கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் மதுக்கூர்ராமலிங்கம் கலந்து கொண்டு உரையாற்றுகை யில், “குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து தமிழகத்தில் போராடி வரு கிறார்கள். இதை அமல்படுத்தமாட் டோம் என்று தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் இயற்ற ஆட்சியாளர்க ளுக்கு மனமில்லை” என்றார். மாவட்டத்துக்கு ஒரு மருத்துவக் கல்லூரி துவங்கி வருகிறோம் என்று அதிமுவினர் பெருமை கொள்கிறார் கள். இந்த கல்லூரிகளில் தமிழக மாண வர்கள் பெரும்பான்மையாக படிக்க முடியுமா? என அவர் கேள்வி எழுப்பி னார்.
தில்லி கலவரத்தின்போது ஆறு இஸ்லாமியர்களை காப்பாற்றி பிரேம் நாத் என்ற இந்து சகோதரன் உடலில் ஏற்பட்ட தீக்காயத்தால் உயிரிழந் துள்ளார். மசூதியில் ஏற்றிய காவிக் கொடியை ரவி என்ற இந்து இளை ஞன் அகற்றியுள்ளார். இந்து, முஸ்லீம் என மதங்களை கடந்து சகோத ரர்களாக வாழ்கிறவர்கள். அந்த ஒற்று மையே கலைக்க முடியாது. மூவர்ண தேசியக் கொடியை வடிவமைத்தது ஒரு இஸ்லாமியர்தான் என்றும் அவர் கூறினார்.
இஸ்லாமிய பெண்கள் காத்திருப்பு போராட்டத்தில் அறவழியில் போராடு கிறார்கள். அவர்களுக்கு அனைத்துப் பகுதியினரும் துணை நிற்கிறார்கள். தில்லி கலவரம் குறித்து முறையான விசாரணையை நீதிபதி முரளிதரன் மேற்கொண்ட போது அவரை இர வோடு இரவாக மாற்றுகிறார்கள். தமிழகத்தின் பிரதான கோயில் களை தொல்லியல் கட்டுப்பாட்டில் எடுத்து சமஸ்கிருதத்தை திணிக்க முயற்சிகளை செய்து வருகிறது. இது மதச் சார்பற்ற அரசியலுக்கு எதிரா னது. குடி கெடுக்கும் சட்டத்தை நிறைவேற்ற மாட்டோம் என தமிழக அரசு அறிவிக்கக் கோரி வரும் 9ஆம் தேதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சென்னை கோட்டை முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளது. இப்போது நடப்பது தேசபக்தர்கள் நடத்தும் இரண்டாவது விடுதலைப் போராட்டம். இதற்கு தமிழக மக்கள் அனைவரும் ஆதரவு தரவேண்டும் என்றும் மதுக்கூர் ராமலிங்கம் கேட்டுகொண்டார்.
கட்சியின் கடலூர் மாவட்டச் செய லாளர் டி. ஆறுமுகம், மாநிலக் குழு உறுப்பினர்கள் மூசா, கோ. மாதவன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.ஜி. ரமேஷ்பாபு, என்.பி. ராமச் சந்திரன், தேன்மொழி ஆகியோர் பேசினர். ஒன்றியச் செயலாளர்கள் கீரப் பாளையம் வாஞ்சிநாதன், காட்டு மன்னார்கோவில் இளங்கோவன், குமராட்சி மூர்த்தி, மாவட்டக் குழு உறுப்பினர்கள் கற்பனைச் செல்வம், பிரகாஷ், ஜெயசீலன், சுனில்குமார், நகர்குழு உறுப்பினர் சங்கமேஸ்வரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.