tamilnadu

img

மாற்றுத்திறன் ஊழியர்களுக்கு விருப்ப அடிப்படையில் தேர்தல் பணிக்கு வரவேற்பு

சென்னை,டிச.21- நடைபெற உள்ள ஊராக உள்ளாட்சித் தேர்தல் பணிகளில் பல்வேறு வகை மாற்றுத் திறன் அரசு ஊழியர்களை கட்டாயம் ஈடுபட வேண்டுமென மாவட்டங்களில் அதிகாரிகள் வற்புறுத்தப்படுவது சுட்டிக்காட்டி, தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் சங்கம், மாநில தேர்தல் ஆணையத்துக்கு சனிக்கிழமை(டிச.21) மனு ஒன்றை அனுப்பியது.  அந்த மனுவில், தேர்தல் பணிகளை செய்ய விரும்பும் மாற்றுத்திறன் ஊழியர்களை பணியமர்த்த லாம், தன்னால் தேர்தல் பணிகளை முழுமையாக செய்ய இயலாது என தெரிவிக்கும் மாற்றுத்திறன் ஊழியர்களுக்கு, விலக்கு அளிக்க வழிவகை செய்ய என்பதை மாநில தேர்தல் ஆணையம் பின்பற்ற வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட் டிருந்தது. இதை சங்கத்தின் மாநில நிர்வாகிகள் பி.ஜீவா, பி.எஸ். பாரதி அண்ணா ஆகியோர் மாநில தேர்தல் அதிகாரியிடம் நேரில் வலியுறுத்தினர். உத்தரவு இதனை ஏற்றுக்கொண்ட மாநில தேர்தல் ஆணைய செயலர் முனைவர். இல.சுப்பிரமணியன் உடனடியாக புதிய உத்தரவை வெளியிட்டுள்ளர். இதில் மாற்றுத்திறன் ஊழியர்களை விருப்ப அடிப்படையில் மட்டும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள், தேர்தல் பணியில் ஈடுபடுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார். இந்த புதிய உத்தரவை வரவேற்பதாக சங்க மாநிலத் தலை வர்கள் எஸ். நம்புராஜன், பா.ஜான்சி ராணி ஆகியோர் அறிக்கை ஒன்றில் தெரிவித்திருக்கிறார்கள்.

;