tamilnadu

img

டாஸ்மாக்கை திறக்காதே!

இன்று கருப்புச் சின்னம் அணிவீர்! 

திமுக, தோழமை கட்சிகள்  வேண்டுகோள்

சென்னை, மே 6- தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிகளில் அரசு அலட்சியம் காட்டுவதாக திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றன. இந்த நிலையில், ஊரடங்கு விதிமுறைகளை தளர்த்தி தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை திறக்க அரசு அனுமதி அளித்துள்ளது. இதற்கு திமுக கூட்டணி கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கையில் தமிழக அரசு தோல்வி அடைந்துவிட்டதாகவும், அரசுக்கு எதிராக வியாழனன்று (மே 7) மக்கள் அனைவரும் கருப்பு சின்னம் அணிந்து அரசுக்கு எதிராக முழக்கமிட வேண்டும் என்றும் திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

‘மதுக்கடைகளை திறக்க ஆர்வம் காட்டும் அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மக்கள் கருப்பு சின்னம் அணிந்து  நாளை காலை 10 மணிக்கு அவரவர் வீட்டு வாசலில் நின்று 15 நிமிடம் முழக்கமிடுங்கள். கொரோனா ஒழிப்பில் தோல்வி அடைந்துவிட்ட அரசை கண்டிக்கிறோம் என முழக்கமிடுங்கள். தமிழக மக்கள் அணியும் இந்த கருப்புச் சின்னம் மற்றும் போராட்டம், அதிமுக அரசின் கண்களை திறக்கட்டும்’ என திமுக கூட்டணி தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கூட்டணி கட்சி தலைவர்கள் ஆலோசனை நடத்தி இந்த போராட்ட அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

 

அனைவரும் பங்கேற்க சிபிஎம் வேண்டுகோள்

சென்னை, மே 6-  மாநிலங்களுக்கு கொரோனா நிவாரண நிதி வழங்காத மத்திய பாஜக அரசையும் மக்கள் மீது அக்கறையில்லாமல் டாஸ்மாக் மதுக்கடைகளைத் திறக்கும் மாநில அதிமுக அரசையும் கண்டித்து மே 7 அன்று அனைத்துக்கட்சிகள் சார்பில் கருப்பு அட்டையுடன் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.  இந்த இயக்கத்தில் அனைவரும் பங்கேற்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது. இதுகுறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 

கொரோனா தொற்றின் காரணமாக அறிவிக்கப்பட்டுள்ள பொது ஊரடங்கால் ஏழை -  எளிய மக்கள், அன்றாடக் கூலி உழைப்பாளி கள், விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள்,  மீனவர்கள், நெசவாளர்கள், ஆட்டோ-டாக்சி  ஓட்டுநர்கள் மற்றும் சிறு குறு தொழில் முனை வோர் உள்ளிட்ட அனைவரும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார்கள். இவர்களுக்கான நிவாரண நடவடிக்கைகளை அதிகரிக்க வேண்டு மென தொடர்ந்து எதிர்க்கட்சிகளின் சார்பில் வற்புறுத்தப்பட்டு வரும் கோரிக்கைகளை மாநில அதிமுக அரசு நிராகரித்து வருகிறது.

வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதுபோல் நாளை (வியாழன்) மதுக்கடைகளை திறந்திட உள்ளது. மத்திய அரசு,  மாநிலங்களுக்கான  நிதி உதவி யினை ஏற்க மறுத்து வரு கிறது. உலகில் பல நாடுகளில் கொரோனா எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு ஒட்டுமொத்த தேசிய உற்பத்தி யில் 10 சதவீதம் முதல் 20  சதவீதம் வரை நிதி ஒதுக்கி  நிவாரண நடவடிக்கைகளை  மேற்கொண் டுள்ள நிலையில் மத்திய பாஜக  அரசு வெறும் 0.7 சதவீதத்தை மட்டும் ஒதுக்கி இந்திய மக்களை நிராதரவாக விட்டுவிட்டு உள்ளது.

இத்தகைய மத்திய - மாநில அரசுகளை கண்டித்து திராவிட முன்னேற்றக் கழகம் தலை மையிலான தோழமைக் கட்சிகளின் சார்பில் இன்று (மே 7) அவரவர்கள் வீட்டிலேயும், கட்சி அலுவலகங்களிலும் 5 பேருக்கு மிகாமல் கருப்பு அட்டை அணிந்து ஆர்ப்பாட்டம் நடத்து வதற்கான கூட்டறிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பின் அடிப்படையில் தமிழகம் முழு வதும் உள்ள கட்சித் தோழர்கள், ஆதரவாளர் கள், அனுதாபிகள் மற்றும் அனைத்துப் பகுதி  பொதுமக்களும் தங்கள் வீடுகளுக்கு முன்பாக வும், ஆங்காங்கு உள்ள கட்சி அலுவலகங் களுக்கு முன்பாகவும் 5 பேருக்கு  மிகாமல் கருப்பு பட்டை அணிந்து காலை 10 மணிக்கு 15 நிமிடங்கள் ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும். இன்று ஒருநாள் முழுவதும் அனைவரும் கருப்பு பேட்ஜ் அணிய வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.