tamilnadu

img

புதுக்கோட்டை மாவட்டத்திலும் தொற்று பரவியது

மதுரை, ஏப்.20- தமிழகத்தில் கொரோனா தொற்று பாதித்துள்ளவர்கள் எண்ணிக்கை 1,520 ஆக அதிகரித்துள்ளது. திங்களன்று மருத்துவர் உட்பட இருவர் உயிரிழந்துள்ளனர்.  மொத்தம் 17 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவின் வீரியம் குறைந்து வருகிறது என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரி வித்த நிலையில் கொரோனா தாக்கம் குறைந்தபாடில்லை. குறிப்பாக கடந்த 25 நாட்களாக கொரோனா தொற்றே இல்லாத மாவட்டம் என்ற பெயரை தக்க வைத்த புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒருவருக்கு தொற்றிருப்பது திங்களன்று கண்டறிப்பட்டது.

ஞாயிறன்று கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,477 அக இருந்த நிலையில் திங்களன்று 43 பேருக்கு தொற்றி ருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில் மொத்த எண் ணிக்கை 1,520 ,ஆக அதிகரித்துள்ளது. திங்களன்று 6,109 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. திங்கள்கிழமை வரை 46,985 சாம்பிள்கள் சோதனை செய்யப்பட்டுள்ளது. மொத்த நபர்களின் எண்ணிக்கை 41,710. திங்களன்று 46 பேர் நலமடைந்து வீடு திரும்பிவிட்டனர். மொத்தம் 457 பேர் வீடு திரும்பியுள்ளனர். மொத்தம் பாதிக்கப்பட்டோரில் நலமடைந்தவர்களை கழித்தால் தற்போது 1,043 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

அதிகபட்சமாக சென்னையில் 18 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. தென்காசி, திருச்சிராப் பள்ளி, விழுப்புரம் மாவட்டங்களில் தலா நான்கு பேருக்கும், அரியலூர், திண்டுக்கல்லில் தலா இருவருக்கும், புதுக் கோட்டையில் ஒருவருக்கும் தொற்றுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. மற்றபடி தமிழக அரசு சிறப்பாகச் செயல்படுவதாகக் கூறிய  விஜயபாஸ்கர், மக்கள் வதந்திகளை நம்பவேண்டாம் எனக் கூறிய அவர், நோய் எதிர்ப்பு, தடுப்பு என்ற ஒற்றை இலக்கை நோக்கை செயல்பட வேண்டும். மலிவான அரசி யல் வேண்டாம் என்றார்.

;