tamilnadu

img

கோவில் அன்னதானம்: சான்றிதழ் அவசியம்

சென்னை:
உணவு பாதுகாப்புத் துறையால் பதிவு செய்யப்பட்ட சான்றிதழ் இருந்தால் மட்டுமே கோவிலில் அன்னதானம் செய்ய  அனுமதி வழங்கப்படும் என்று உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.அறநிலையத் துறையின் கீழ் செயல்படும் ஆலயங்களில் அன்னதானம் அளிப்போர் மேற்கொள்ளவேண்டிய நடைமுறைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி சென்னை அசோக் நகரில்  தனியார் விடுதியில் நடைபெற்றது. இதில், சமையல் செய்யும் அறை காற்றோட்டமாகவும், வெளிச்சம் மிகுந்த இடமாகவும் இருக்க வேண்டும். சமையல் செய்வோருக்கு எந்தவித தொற்று நோயும் இல்லை என்பதை உறுதிப்படுத்தும் மருத்துவ சான்றிதழ் பெற்றிருப்பது அவசியம்.  ஆண்டுக்கு 100 ரூபாய் செலுத்தி உணவு பாதுகாப்பு துறையின் சான்றிதழ் பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.வேண்டுதல் காரணமாக, கோயில்களில் அன்னதானம் செய்ய வருவோர், உணவு பாதுகாப்புத்துறையில் பதிவு செய்யப்பட்ட சான்றிதழ் இருந்தால் மட்டுமே, அன்னதானம் வழங்க அனுமதி வழங்கப்படும் என்று தெளிவுபடுத்தப்பட்டது. செப்பு பாத்திரத்தில் புளி சாதம் செய்வதால் நச்சுத்தன்மை ஏற்படும் என்பதால் அவற்றை தவிர்க்கவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

;